சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு : ஏய் எல்லாரும் பார்த்துக்க நாங்க முஸ்லிம்களுக்கு உதவி பண்றோம் !

பாகிஸ்தானுக்கு இந்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையில் 5 மில்லியன் டாலர், நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் மீது தங்களுக்கு எந்தப் பகையும் இல்லையென்றும், இரு தேசங்களுக்கு இடையிலான பிரச்னைகளை பேசி தீர்க்க எப்போதும் தயாராக உள்ளது, என்பதையும் இந்திய அரசாங்கம் மற்றுமொருமுறை நிருபித்துள்ளது.

சுதந்திரப் போராட்டக் காலத்தில், காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்திகொண்டு, இந்தியாவின் ஒரு பகுதியை பிரித்து, பாகிஸ்தன் என்று இஸ்லாமியர்களுக்கான தேசமாக அமைத்தனர். பிரிவினையிலிருந்து இன்றுவரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சுமூக உறவு இருந்ததில்லை.

காஷ்மீரைப் பாகிஸ்தானின் ஒரு பகுதி என்றும், அங்கு இஸ்லாமியர்களே பெரும்பானையினர், அதனால் அந்தப் பகுதி பாகிஸ்தானுடன் இணைக்கப் பட வேண்டும் என்று அவர்கள் துவக்கிவைத்த போராட்டம் இன்றுவரை காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்பி பல்வேறு சதிகளையும், அவ்வப்போது நேரடியாக யுத்தமும் செய்துவந்தாலும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரு தேசத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இந்திய அரசு எப்போதும் தயாராகவே இருந்துள்ளது.

சுதந்திரம் அடைந்து இந்த அறுபத்துமூன்று ஆண்டுகளில், இந்தியா அனைத்து துறைகளிலும் ஆரோக்யமான வளர்ச்சி கண்டுள்ளது. ஊழல்களும், கலவரங்களும் பல நடந்தாலும், நிலையான அரசாங்கமும், சீரான வளர்ச்சியும் எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்படவில்லை.

ஆனால் பாகிஸ்தானின் நிலையைப் பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். ஜனாயகமும், ராணுவமும் போட்டிபோட்டுக்கொண்டு நிலையான அரசாங்கம் இல்லாமல் செய்துவிட்டார்கள். தகவல் தொழில்நுட்பத்திலும், தொழில் துறையிலும் இந்தியா கண்டுள்ள முன்னேற்றத்தை இன்னும் பாகிஸ்தான் அடையவில்லை.

இந்தியா மீதான தாக்குதல்களிலும், இஸ்லாமிய சகோரத்துவம் என்ற பெயரில் தீவிரவாதத்தைப் பரப்புவதிலும் காட்டிய அக்கறையை தேசத்தின் வளர்ச்சியில் காட்டவில்லை, அந்த நாட்டை ஆள்பவர்கள்.

அதனால் தான் இன்று வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.மக்களின் அவர்சார கால தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் அந்த அரசாங்கம் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். வெள்ளத்தின் பிடியில் சிக்கி துயரப் பட்டுக்கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற, அவர்கள் வளர்த்த எந்தவொரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கமும் முன் வரவில்லை. இஸ்லாத்திற்கு விரோதிகள் என்று அவர்கள் அழைத்த தேசங்களே உதவுகின்றன.

இனியாவது பாகிஸ்தான் அரசாங்கம், இரட்டை வேடம் போடுவதை நிறுத்திவிட்டு, தங்கள் நாட்டு மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். விஞ்ஞானத்திலும், தொழில் துறையிலும், தகவல் தொழில் நுட்பத்திலும் அந்த தேசம் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அந்த வளர்ச்சிப் பாதையில் மட்டுமே அவர்கள் கவனம் இருக்கட்டும்.

1 கருத்துரைகள்:


மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள். மதத்தின் பெயரால் துவேஷம் பரப்பியதும், வன்முறையை தூண்டியதும், மக்களை கல்வியறிவு பெறாமலும், நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளியதுமே இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் கண்ட ச்சாதனை. இனிமேலாவது மதத்தை தூரவைத்துவிட்டு நாட்டின் முன்னேற்றத்தில் கவனம்வைத்தால் அந்நாடு ஒருவேளை பிழைக்கலாம். இல்லையெனில் மீண்டும் இருண்டகாலமே,.. யாரையெல்லாம் எதிரிகள் எனச் சொல்கிறார்களோ அவர்களிடமே பிச்சை எடுக்க வேண்டியதுதான்..


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U