ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

ஆண்ட்ரூ கார்னேஜி. இரும்பு உருக்குத்  தொழிலில் புகழ் பெற்றவர்.உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.பிறருக்கு உதவும் மனப்பான்மையும் கொண்டவர். எத்தனையோ பள்ளிகள்,கல்லூரிகள், நூலகங்கள், இவரது உதவியை பெற்று வளர்ந்திருக்கின்றன.

ஆனால் அடுத்தவருக்கு உதவுவதிலும்,ஒரு கொள்கையை வைத்திருந்தார், கார்னேஜி. அதாவது, தன்னிடம் உதவி கேட்டு வருகிறவர்கள், தங்கள் முயற்சியில், சிறிதளவு நிதியைத் திரட்டியிருக்க வேண்டும். தன்னிடம் மட்டுமே முழு உதவியையும் எதிர்பார்க்கக் கூடாது என்பார். "ஒருவரை ஏணியில் ஏற்றிவிட நான் முன்வந்தால் மட்டும் போதாது. நாம் இந்த ஏணியில் ஏறி உயரே போகவேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருக்க வேண்டும்" என்று தன் கொள்கை விளக்கத்தைச் சொல்வார்.

இப்படிப்பட்ட கார்நேஜியிடம், உதவி கேட்டு, ஒரு இசைக்குழுவின் பொருளாளர் வந்திருந்தார்.புகழ்பெற்ற அந்த இசைக்குழு, தற்சமயம் கடனில் மூழ்கியிருந்ததால், அதைக் காப்பாற்ற நிதியுதவி தேவைப்பட்டது. இதனைச் செய்யக் கூடியவர், கார்நேஜிதான், என்று அவரிடம் வந்து உதவி கேட்டிருந்தார்.

கார்நேஜிக்கும் அந்த இசைக்குழுவின் மீது நல்ல மதிப்பு இருந்தது.உதவ ஒப்புக்கொண்டார். ஆனால் வழக்கம்போல தன் கொள்கைப்படி, அவர்கள், தங்கள் சொந்த முயர்ச்சியிலேயே, பாதித் தொகையை திரட்டி வர வேண்டும். மற்றொரு பாதித் தொகையை தானே தந்துவிடுவதாக கூறினார்.

என்னடா இது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று நொந்துகொண்டு, அங்கிருந்து கிளம்பினார் அந்த பொருளாளர்.

அடுத்த நாள் அந்தப் பொருளாளர் மீண்டும் கார்நேஜியைப் பார்க்க வந்திருந்தார். ஒரு பாதித் தொகையை தாம் திரட்டிவிட்டதாகச் சொன்னார்.

ஒரே நாளில், இத்தனிப் பெரிய தொகையை இந்த நபர் திரட்டியது ஆச்சர்யமளித்தது. இதனைப் பெரிய தொகையை உடனே கொடுத்தவர் யார் என்று அறிய விரும்பி அந்த பொருளாளரிடம் கேட்டார்.

அது வேறுயாருமல்ல. தங்கள் மனைவி திருமதி கார்நேஜிதான் என்றார் அந்த பொருளாளர்.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க.

1 கருத்துரைகள்:


This comment has been removed by the author.

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U