தனக்கு வந்தால் மட்டும் தடை

கடன் வேணுமா? கிரெடிட் கார்டு வேணுமா? என்று கேட்டு இனி யாரும் அலைபேசிகளில் தொல்லை கொடுக்க முடியாது. இந்த அழைப்புகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏன் இந்த திடீர் தீவிரம். பல ஆண்டுகளாக தொல்லை கொடுத்து வந்தவர்களை இன்றுதான் அடையாளம் கண்டுகொண்டது போல் செயல்படுவது ஏன்?

காரணம் தமாஷ்தான்.

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாராளுமன்ற அமளி தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தபோது, அவரது அலைபேசியில் ஒரு அழைப்பு வந்ததாம். ஏதோ முக்கிய அழைப்பாக இருக்குமென்று என்று எடுத்த அமைச்சரிடம் "உங்களுக்கு வீட்டுக் கடன் வேண்டுமா?" என்று யாரோ கேட்டார்களாம்.

அவ்வளவுதான். கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் பிரணாப். அதனால் தான் இந்த்த தடை நடவடிக்கையாம்.

அது சரி, இந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு வந்தால்தான் எதையும் செய்வார்கள். இதுவரை எத்தனைப்பேருக்கு, நெரிசலான சாலைகளிளில் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போதும், ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்போதும், முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும்போதும் இதுபோன்ற அழைப்புகள் வந்து தொல்லை கொடுத்திருக்கும்?

அரசியல்வாதிகளை பாதித்தால் உடனடி நடவடிக்கைதான்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U