சொர்க்கம் - நரகம்

ஜென குரு ஒருவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அந்த வழியாக சென்ற வீரனொருவன், தியானத்தில்  இருந்த குருவைக் கண்டதும் குதிரையை விட்டு கீழே இறங்கி வந்து அவரை வணங்கி  நின்றான். சிறிது நேரங்கழித்து கண் விழித்த குரு எதுவும் பேசாமல் அந்த வீரனை ஊடுருவி நோக்கினார்.

"குருவே எனக்கு நீண்ட நாட்களாக  ஒரு சந்தேகம் தாங்கள் தான் அதற்க்கு ஒரு விடை கூறி தெளிவு அளிக்க வேண்டும்" என்றான் அந்த வீரன்

குரு மௌனமாகவே அதனை ஆமோத்திதார்.

"சொர்க்கம் நரகம் என்றெல்லாம் நெடுங்காலமாய் சொல்லப்பட்டு வருகிறதே, அவை உணமையிலே உள்ளனவா?" என்று தன சந்தேகத்தை கேட்டான் அந்த வீரன்.

அவனை தீர்க்கமாக நோக்கிய குரு மெல்ல அவனிடம் ஒரு கேள்வி கேட்டார்

"நீ என்ன தொழில் செய்கிறாய்?"

"நான் இந்த நாட்டின் தளபதி. அனைத்து படை வீரர்களுக்கும் பிரதான் சேனாதிபதி" என்றான் வீரன் பெருமையுடன்.

அதற்க்கு குருவிடம் ஒரு கேலிச் சிரிப்பே பதிலாக வெளிப்பட்டது.

இதைக் கண்டு கோபமுற்ற வீரன்  கர்ஜித்தபடியே வாளை உருவினான்.

"இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன" என்றார் குரு சிரித்தபடியே

இது கேட்டு பிரமித்த வீரன், வாளை உறையிலிட்டு அவரை வணங்கி "மன்னிக்க வேண்டும குருவே " என்று கை கூப்பி நின்றான்.

"இதோ சொர்கத்தின் கதவுகள் திறந்து விட்டன" என்றார் குரு


இந்தக் கதையின் மூலம் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற கூற்றுக்கான அர்த்தம் தெளிவாக விளங்குகிறது.

சொர்கமும் நரகமும் நாம் பின்பு இருக்கிறதோ இல்லையோ வாழும்போது இருக்கிறது. பிறரிடம் அன்பு செலுத்தி அமைதியாக வாழும்போது நாம் சொர்கத்தில் வாழ்கிறோம்.

நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் குரோதத்துடனும் துவேஷத்துடனும் நாம் வாழும்போது அவர்களிடமிருந்து நாம் அதையே பெறுகிறோம். சர்வ வல்லமை பொருந்தியவர்களாக நாம் தெரிந்தாலும் மற்றவர்கள் நம்மை எப்போது தாக்குவார்களோ என்று ஆழ் மனத்தில் பயத்துடன் வாழ்வோம். இதுவே நாம் நரகத்தில் வாழும் வாழ்க்கையாகி விடுகிறது. 

பிறரிடம் அன்பு செலுத்தி வாழ்வதே நாம் எப்போதும் சொர்கத்தில் வாழும் வாழ்க்கையாகும்.

உலகில் நாம் அன்பை மட்டுமே பரப்புவோம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U