நேர நிர்வாகம் - பெஞ்சமின் பிராங்க்ளின் கற்றுக்கொடுத்த பாடம்

பெஞ்சமின் பிராங்க்ளின். இந்தப் பெயரை அறியாத அமெரிக்கர்களோ உலக இலக்கிய அறிஞர்களோ இருக்க முடியாது. அரசியல்வாதி, இலக்கியவாதி, சிந்தனையாளர் என்று பன்முகம் கொண்டவர். அமெரிக்க அரசியல் சாசனம் தொடங்கி அந்நாட்டின் வரலாற்றில் இவரது ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது.

அவர் ஒரு புத்தக வெளியீட்டகம் நடத்தி வந்தார். ஒரு நாள் அந்த கடைக்கு வந்த ஒருவர் ஒரு புத்தகத்தை எடுத்து அங்கு பணியிலிருக்கும் பையனிடம் அந்த  புத்தகத்தின் விலையைக் கேட்டார்.

"ஒரு டாலர்" என்றான் அந்த பணியாள்.

வந்தவருக்கு அந்த விலை அதிகமாக தோன்றவே, "நான் அடிக்கடி இங்கு வந்து புத்தகங்கள் வாங்குவேன். எனக்கு விலையைக் குறைத்துத் தர வேண்டும்" என்றார்.

அதற்க்கு அந்த சிப்பந்தி "நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களிடம் பாரபட்சம் பார்ப்பது இல்லை. புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விலைக்கே விற்க வேண்டுமென்பது எங்கள் உரிமையாளர் உத்தரவு" என்றார்.

"அப்படியானால் நான் உங்கள் உரிமையாளரைப் பார்க்க வேண்டும்" என்றார் வந்தவர்.

உரிமையாளர் உள்ளே முக்கியமான் வேலையில் இருப்பதாக சொன்னார் அந்த பணியாளர். வந்தவர் அவரை பார்க்காமல் செல்வதில்லை என்றார். அவர்களுக்குள் வாக்குவாதம் வளர்ந்தது.

இவர்களின் சத்தம் கேட்டு வெளிய வந்த பெஞ்சமின் பிராங்க்ளின், அந்த வாடிக்கையாளரிடம் என்னவென்று கேட்டார். அவரும் அந்தப் புத்தகத்தை காட்டி அதன்  விலையைக் கேட்டார்.

"ஒன்றேகால் டாலர்" என்றார் முதலாளி

கேட்டவர் அதிர்ச்சியடைந்து "பையன் ஒரு டாலர் தான் சொன்னான்" என்றார்

"ஆம் பையன் சொன்னது ஒரு டாலர் தான். நான் சொன்ன விலை ஒன்னேகால் டாலர். இப்போது அந்த விலைக்கும் தர முடியாது. ஒன்றரை டாலர் வேண்டும்" என்றார் பெஞ்சமின் .

அதிர்ந்துவிட்ட வாடிக்கையாளர் "என்ன இது இருக்க இருக்க விலையை ஏற்றிக் கொண்டே போகிறீர்களே" என்றார்.

"ஆம் இன்னும் தாமதித்தால் இன்னும் ஏறும்" என்றார் பெஞ்சமின்.

"ஏன் அப்படி?" என்றார் வந்தவர்

"ஏனென்றால் நீங்கள் என் பொன்னான நேரத்தை விரயம் செய்துகொன்டிருக்கிறீர்களே அதனை யார் ஈடு கட்டுவது?." என்றார் பெஞ்சமின் .

வந்தவர் எதுவும் பேசாமல் ஒன்றரை டாலரைக் கொடுத்துவிட்டு புத்தகத்தை எடுத்துச் சென்றார்.

நம்மில் பலரும் இப்படித்தான். ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்காக பேரம் பேசி  அதனை விட மதிப்புமிக்க நேரத்தை வீணடிப்போம். நேரத்தின் மதிப்பை இந்த நிகழ்ச்சியின் மூலம் பெஞ்சமின் பிராங்க்ளின் நமக்குப் புரியவைத்து விட்டார்.

1 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U