அறிஞர் அண்ணாவும் காக்காவும்

அறிஞர் அண்ணா,  ஒரு முறை,காஞ்சிபுரத்தில், நாடகக் கட்சிகளை எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக லட்சுமணன் என்ற இளைஞரும், உடன் இருந்தார். பகல் உணவு நேரம் நெருங்கியும், தன்னையும் அண்ணாவையும், யாரும் சாப்பிட அழைக்காதததைக் கண்டு ஆச்சர்யப்பட்டார், லட்சுமணன். அவருக்கோ நல்ல பசி. அண்ணாவின் முகத்தைப் பார்த்தார்.
அவரது உள்ளத்தை உணர்ந்து கொண்ட அண்ணா, சின்னம்மாவிடம் தாமதத்திற்கு காரணம் கேட்டார்.

இன்று அமாவாசை விரத நாள், அதனால், காக்கைக்கு உணவு படைத்த பின்பே சாப்பிட வேண்டும் என்று பதில் வந்தது.

இதைக்கேட்ட அண்ணா, "நாமும் காக்கைகளாகப் பிறந்திருக்கக் கூடாதா என்று எனக்கு இப்போது தோன்றுகிறது." என்றார் அருகிலிருந்த லட்சுமணனிடம்.

உணவு முடிந்ததும், அன்ன லட்சுமணனிடம், இது போன்ற மூடப் பழக்கங்கள், தென்னகெங்கும், பல வீடுகளில் பரவியிருக்கிறது. இதனை திடீரென்று கிள்ளிஎறிந்து விட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மக்களின்  மனதை மாற்றி, பகுத்தறிவு பெறச் செய்ய வேண்டும் என்றார்.

இந்த சம்பவத்தின் மூலம்,அறிஞர் அண்ணா, சமுதாயத்தில் நிலவும் சம்பிரதாய நம்பிக்கைகளை எதிர்த்து, மக்களுக்கு தெளிவு அளிக்க எத்தகைய முயற்ச்சிகளை எடுத்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U