தமிழின் உயரம்
உலகில் பழமையும் பெருமையும் மிக்க மொழிகளாக அறிஞர்கள் போற்றுபவை ஆறு மொழிகள்.
கிரேக்கம்
இலத்தீன்
ஹீப்ரு
தமிழ்
சீனம்
சமஸ்க்ருதம்
இவற்றில் கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு மொழிகள் பேசப்படுவது மிகவும் அரிதாகிவிட்டது
சமஸ்க்ருதம் மந்திரங்கள் நிரம்பியதாக உள்ளதால் அது மறைமொழியாக கருதப்படும் அதுவும் பேச்சுவழக்கில் இல்லை.
சீன மொழியின் எழுத்துக்கள் அறுபதினாயிரம். இதில் ஆறாயிரம் அறிந்தவர்கள் அறிஞர்களாக குறிப்பிடபடுகின்றனர்.
ஆக கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு அதிகம் பேசப்படாத கிட்டத்தட்ட வழக்கொழிந்த மொழிகள். சமஸ்க்ருத மொழியும் பேச்சு வழக்கில் இல்லை. சீன மொழியில் எழுத்துக்கள் அதிகம்.
அப்படிப் பார்த்தல் இன்று உலக அளவில் அதிகம் பேசப்படும் தமிழ் மொழிதான் இந்த பழமையான மொழிகளில் சிறந்தது.
ஒரு மொழி செம்மொழி அந்தஸ்த்து பெற வேண்டுமானால், அந்த மொழி இந்தியா தாண்டி வேறு நாடுகளின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டுமென்பது விதி. தமிழ் மொழி, இலங்கை, மலேசியா, சிங்கபோரே ஆகிய நாடுகளில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த நாட்டு பானங்களிலும் அச்சிடப்பட்டுள்ளது தமிழ் மொழி.
தமிழ் அறிவியலிலும் வெகுவாக பரவியுள்ளது. உலகில் உள்ள நாடுகளையெல்லாம் இணைத்திருக்கும் இணையத்தில் அதிக வலைத்தளங்களைப் பெற்றிருப்பது ஆங்கிலம். அடுத்ததாக ஸ்பானிஷ்.
இந்திய மொழிகளில் அதிக வலைத்தளங்களைகொண்டது தமிழ் மொழி. இந்தப் பெருமைக்குக் காரணம் இந்தியாவில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல. உலகம் முழுக்கப் பரவியுள்ள தமிழ் சமுதாயம்தான்.
இன்று வலைபூ எனப்படும் வலைபதிவுகளிலும் அதிக பதிவுகள் தமிழ் மொழியில்தான் உள்ளன.
இதைப் படித்த எனக்கு தமிழின் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன என்று சிந்திக்கத் தோன்றியது. கூடவே இத்தகைய பெருமைகளைக் கொண்ட தமிழ் மொழியின் இன்றைய நிலை தமிழகத்தில் எவ்வாறு உள்ளது என்றும் கேள்வி எழுந்தது.
இதக்கு விடையாக எனக்குத் தோன்றியதென்னவோ திராவிட இயக்கங்கள்தான் . அவர்கள் ஹிந்தி திணிப்பை எதிர்த்துப் போராடினார்கள். அதனால் மக்கள் ஹிந்தியை புறக்கணித்தனர். ஆனால் ஆங்கிலத்தை நேசிக்கத் தொடங்கினர். மற்ற மாநிலத்தவரைவிட ஆங்கிலம் அழகாகவும் சரளமாகவும் பேசினார்கள் தமிழர்கள். அடஹ்ன் விளைவாக அதிகளவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றனர். அங்கு சென்ற பிறகும் தமிழ் மொழியை மறக்காமல் இணையத்தில் அதனைப் பதிவு செய்தனர்.
திராவிட இயக்கத்தினர் அன்று ஹிந்தி மொழியை எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால், இன்று தமிழ் மொழி இந்த அளவு வளர்ந்திருக்குமா? என்று சந்தேகமாகவே உள்ளது..
தமிழ் உலகம் முழுக்கப் பரவியிருந்தாலும் தமிழ் நாட்டில் அதன் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. இங்கு தமிழ் பேசுவது அரிதாகவே உள்ளது. பிட்சா, பர்கர் என்று உணவிலுருந்து பாப் அல்பங்கள் என்று இசைவரை அனைத்தும் ஆங்கிலமயமாக இருக்கும்போது பேசும் மொழி மட்டும் தமிழாக இருந்தால் நல்லா இருக்குமா?
எந்த ஒரு பொருளின் மதிப்புமே அருகிலிருக்கும்போது தெரியாது. தொலைத்த பிறகு தான் வருந்துவோம். அதுபோல தமிழையும் தமிழ் நாட்டில் இருக்கும்வரை உணராது அயல் நாடுகளுக்குச் செல்லும்போது அதன்பெருமையை அறிகிறோம்.
தமிழ் இன உணர்வு, தமிழனின் போராட்டம், தமிழ் இன எழுச்சி என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதைவிட தமிழ் நாட்டில் தமிழின் மகத்துவத்தை உணர்த்தி இளைஞர்களிடையே மாற்றத்தை கொண்டுவர முயற்சி எடுக்க வேண்டும்.
4 கருத்துரைகள்:
எனக்கும் இந்த சந்தேகம் நெடுநாளாய் இருந்தது..உங்கள் தேடலில் அது தீர்ந்ததில் மகிழ்ச்சி..அருமையான பதிவு...
திராவிட இயக்கங்கள் தான் தமிழை வாழ வைத்தன என்பதை முழுமையாக ஒப்புக் கொள்ள முடியாது.. எந்த மொழியுடன் சேர்த்தும் தமிழைப் பயிலலாம்.. தமிழுடன் ஹிந்தியைச் சேர்த்துப் படித்திருந்தாலும் தமிழ் ஓங்கியே இருந்திருக்கும்.... அதில் சந்தேகம் வேண்டாம். எல்லாவற்றிற்கும் காரணம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்ற நம் மக்களின் உணர்வு தான்.. அனைத்துக்கும் மேலே நிற்கும் உயர்தனிச் செம்மொழி நமது மொழி.. அதனை வளர்க்கும் தமிழறிஞர்களுக்கும், புத்தகங்களுக்கும் நாம் கடமைப் பட்டு இருக்கிறோம்.. இப்போதைக்கு அசைக்க முடியாது. அறியாத வயதில் அதன் பெருமையைச் சொல்லி விடுகின்றனர்.. அனால் அதற்கு அப்புறம் ஒருவரும் அதனைப் பின்பற்ற முயல்வதில்லை.. என்ன செய்ய...
i dont know how to activate the tamil language thats y i am typing in tamil same what u have mentioned here thats my quest so far now i cleared with your precious details thanks and do your serve all.
தலைப்புகள்
- அரசியல் (4)
- அலசல் (1)
- ஆன்மிகம் (5)
- எனது பார்வையில் (18)
- தத்துவம் (7)
- படித்ததும் பாதித்ததும் (9)
- பிரபலங்களின் வாழ்க்கையில் (11)
- விமர்சனம் (1)
நான் - ஒரு சுய அறிமுகம்
- STP
- Madurai, Tamil Nadu, India
- இந்த உலகத்தை வாழச் சிறந்த இடமாக மாற்றும் முயற்சியில் ....
Total Pageviews
வாங்க பேசலாம்
நண்பர்கள்
Blog Archive
-
▼
2010
(56)
-
▼
August
(30)
- திருமணமுறிவு சிகிச்சை பிரிவு
- அதிகார அழிவுகள்
- மாப்பிள்ளை வேட்டை
- அன்பின் முகவரி
- முல்லாவின் அல்லா
- காதல் கொலைகள்
- இந்தியக் கனவு
- ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
- கள்வரே! கள்வரே!
- வாழ்வின் ஒளி
- ரக்ஷா பந்தன் - ரட்சிக்கும் பந்தம்!
- இதுக்குப் பேர்தான் சொந்த செலவில் சூனியம் வச்சிக்கு...
- மூன்றாவது கை
- சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு : ஏய் எல்லாரும்...
- காசுக்கு நியூசு : ஊடகங்களின் ஊழல்
- பதிவுலகத் தோழிகளுக்கு சமர்ப்பணம்!
- காமன் வெல்த் போட்டிகள் : பிரச்னைகளின் அடுத்த கட்டம்
- கொலைசெய்யும் தண்டனைகள்
- அரசாங்கத்தை அலறவைத்த அறவழிப்போராட்டம்
- தீர்வுகாண விரும்பும் மாவோயிஸ்டுகள்.
- தமிழின் உயரம்
- தனக்கு வந்தால் மட்டும் தடை
- கோஷ்ட்டிகளை ஒழிக்கும் இளைஞர் காங்கிரஸ்?
- மாறுபட்டு சிந்தியுங்கள்
- நாம் அறிந்த சுதந்திரம்
- கடிதங்கள்! காவியங்கள்!
- யார் இறைத்தூதர்
- நேர நிர்வாகம் - பெஞ்சமின் பிராங்க்ளின் கற்றுக்கொடு...
- லிங்கனின் நேர்மை
- சொர்க்கம் - நரகம்
-
▼
August
(30)
even some area in china has Tamil tradition so they also doing broadcast and telecast service in Tamil. over in Indian languages Tamil has very good status in many contries