மாறுபட்டு சிந்தியுங்கள்

பெரிய பெரிய அறிஞர்களெல்லாம் மாத்தி யோசி, புதிதாக யோசி புதிய கோணத்தில் பாருங்கள் என்று சொல்கிறார்களே இதற்க்கு என்ன அர்த்தம்? எப்படி புதுமையாக யோசிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த அறிஞர்களுக்கு வேறு வேலை இல்லை. ஞானி போல் பேச வேண்டுமென்று யாருக்கும் புரியாத மாதிரி பேசுவார்கள் என்று கூட நினைத்தேன்.

ஆனால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பற்றிய கட்டுரையொன்றை படித்த பொது இதற்க்கான விளக்கம் கிடைத்தது.

கலைவாணர் அவர்கள் ஒரு பள்ளி விழாவில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அது ஒரு ஆரம்பப்பள்ளி என்பதால் அந்தக் குழந்தைகளுக்கு புரிவது போல் தன பேச்சு இருக்கவேண்டும் என்று இப்படி ஆரம்பித்தார்.

"ஒரு ஊர்ல ஒரு முயலும் அமையும் இருந்துச்சாம்.அது ரெண்டும் ஒரு நாள் ஓட்டப் பந்தயம் வச்சுச்சாம்"

என்று அவர் பேசும்போதே குழந்தைகள் தெரியும் தெரியும் என்ற கத்தினார்கள்.

"என்ன தெரியும்?" என்று கேட்டார் கலைவாணர்

"ஆமை ஜெயிச்சுரும் முயல் தோத்துரும்" என்று ஆரவாரம் செய்தனர் குழந்தைகள்.

இதைக் கேட்ட என்.எஸ்.கிருஷ்ணன்

"அப்படித்தான் சொல்லக் கூடாது. முயல் ஆமையால் தோற்றது என்று சொல்லவேண்டும். அதாவது முயல் + ஆமையால் தோற்றது. முயலாமையால் தோற்றது. நீங்களும் முயற்சி செய்யாமல் இருந்தால் தோற்றுவிடுவீர்கள்" என்று விளக்கினர்.

எல்லோரும் அறிந்த கதையை, பல முறை சொல்லப் பட்டவொரு கதையை அவர் ஒரு புதிய கோணத்தில் அணுகினார். அதனால் அந்தக் கதையின் பொருளே மாறிவிட்டது.

இது போல தாமஸ் அல்வா எடிசனின் வாழ்க்கையில் நடந்த சம்பவமொன்று புதிய கோணத்தில் பார்ப்பது என்று விளக்குகிறது.

மின்சார பல்பைக் கண்டுபிடித்த எடிசன் அதனை உருவாக்குவதற்கு பல்வேறு இழைகளை பயன்படுத்திப் பார்த்தார். ஒரு முறை இரு முறையல்ல 1000 முறை. பிறகு தான் கடைசியாக TUNGSTEN என்ற இழையைப் பொருத்தி அந்த பல்பை இயக்கினார்.

இது பற்றி ஒரு பத்திரிக்கை நிருபர் எடிசனிடம் "நீங்கள் ஆயிரமாவ்ந்து முயர்ச்சியாகத் தான் tungsten என்ற இழையைப் பொருத்தி வெற்றி கண்டுள்ளீர்கள். அப்படியானால் நீங்கள் 999 முறை தோற்றுத் தானே போனீர்கள்?" என்று கேட்டராம்.

அதற்கு எடிசன் "இல்லை.நான் 999 முறை எப்படி பல்பை உருவாக்க முடியாது  என்பதை அறிந்து கொண்டேன். அதனாலேயே ஆயிரமாவது முறை வெற்றிகரமாக செய்ய முடிந்தது" என்றார்.

புதிதாக சிந்திப்பது எப்படி? எண்ணங்களை மாற்றுவது எப்படி? என்று பல புத்தகங்கள் படித்தும் புரியாதது இந்த இரண்டு சம்பவங்களைப் பார்த்து மிகத் தெளிவாக புரிந்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U