லிங்கனின் நேர்மை

அமெரிக்க ஜனாதிபதிகளில் அநேகம் பேரால் நேசிக்கப்பட்டவர் ஆபிரகாம் லிங்கன். அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலக அளவில் நன்மதிப்பை பெற்ற தலைவரை அவர் திகழ்ந்தார். அதற்குக் காரணம் அவர் அடிமை முறையை ஒழிப்பத்தற்காக பாடுபட்டதால் மட்டுமல்ல. அவருடைய தனிப்பட்ட பண்புகளுக்கவும் தான்.

இந்தியாவில் காந்தியின் நேர்மையைப் போல் அமெரிக்காவில் லிங்கனின் நேர்மையைச் சொல்லலாம். அவர் செருப்பு தைக்கும் தொழிலாளியாக, மளிகைக் கடைக்காரராக, விறகுவெட்டியாக, வழக்கறிஞராக என்று பல பனிகள் செய்திருந்தாலும் எங்கும் எப்போதும் நேர்மை தவறாதவராக இருந்திருக்கிறார். அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நமக்கு அவரது மகத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

அவரது வாலிபப் பருவத்தில் லிங்கனுக்கு படிப்பின் மீது தீத நாட்டமிருந்தது. ஆனால் அவரது குடும்பச் சூழ்நிலை காரணமாக தனது தந்தைக்கு உதவியாக அவரது பண்ணையில் விவசாயம் செய்து கொண்டிருந்தார். ஆனாலும் புத்தகங்கள் படிப்பதை நிறுத்தவில்லை லிங்கன்.

எவரிடம் எந்த புத்தகம் இருந்தாலும் வாங்கிப் படித்து விடுவார். தனக்குத் தேவையான புத்தகம் ஒருவரிடம் இருக்கிறது என்று தெரிந்தால் எவ்வளவு தூரமானாலும் சென்று சென்று அவரிடம் வாங்கி  படித்துவிடுவார்.

அப்படி லிங்கன் படிக்க விரும்பிய வாஷின்டனின் வாழ்க்கை வரலாறு புத்தகமொன்று  அவரது ஊரிலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும்  பண்ணையார் ஒருவரிடம் இருப்பதாக அறிந்தார். உடனே அந்த பண்ணையாரிடம் சென்று அந்த புத்தகத்தை படிக்க இரவலாக கேட்டார். இந்த புத்தகத்துக்காக இவ்வளவு  தூரம் வந்த லிங்கனைப் பார்த்து வியந்த அந்தப் பண்ணையார்

"சரி தருகிறேன் ஆனால் புத்தகத்தை அலுங்காமல் கசக்காமல் பத்திரமாக திருப்பித் தர வேண்டும். நான் புத்தகங்களை பத்திரமாக பராமரித்து வருகிறேன்" என்றார்

சம்மத்தித்து வாங்கிச் சென்ற லிங்கன் ஒரே மூச்சாக படித்தும் முடித்து விட்டார்.

ஆனால் அன்று இரவு பெய்த மழையில் அந்த புத்தகம் நனைந்து விட்டது.பதறிய லிங்கன் ஒரு முடிவுக்கு வந்தவராய் அடுத்த நாள் காலை அந்த பண்ணையாரிடம் சென்று புத்தகத்தை காட்டி நடந்ததற்கு மன்னிப்புக் கோரினார்.

"அய்யா நான் சொன்னபடி புத்தகத்தை பத்திரமாக திருப்பித் தர முடியவில்லை. மழைபெய்த்போது எங்கள் வீடு ஒழுகியதால் புத்தகம் நனைந்துவிட்டது. அது என் தவறு தான். என்னை மன்னித்துவிடுங்கள். இந்த புத்தகத்திற்கு நஷ்ட ஈடாக நான் உங்கள் பண்ணையில் வேலை பார்த்து கழித்துவிடுகிறேன்" என்றார்

அவரது நேர்மையை பார்த்த பண்ணையார் பாராட்டினார். பின் லிங்கன் அந்த பண்ணையில் வேலை பர்ர்த்து அந்த புத்தகத்திற்க்கான மதிப்பை கழித்து விட்டார்.

லிங்கன் நினைத்திருந்தால் அந்த புத்தகத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.பிரச்சனைகளைக் கண்டு அவர் விலகவில்லை. அவற்றை நேரடியாகச் சந்தித்தார். இதுவே அவரது அரசியல் வாழ்க்கையிலும் தொடர்ந்தது.

ஆனால் இப்படிப் பட்ட லிங்கன் தனது திருமணத்தின்போது கடைசி நிமிடத்தில் யாரிடமும் சொல்லாமல் ஓடியது யானைக்கும் அடிசறுக்கும் என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U