பாகிஸ்தானுக்கு இந்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையில் 5 மில்லியன் டாலர், நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் மீது தங்களுக்கு எந்தப் பகையும் இல்லையென்றும், இரு தேசங்களுக்கு இடையிலான பிரச்னைகளை பேசி தீர்க்க எப்போதும் தயாராக உள்ளது, என்பதையும் இந்திய அரசாங்கம் மற்றுமொருமுறை நிருபித்துள்ளது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில், காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்திகொண்டு, இந்தியாவின் ஒரு பகுதியை பிரித்து, பாகிஸ்தன் என்று இஸ்லாமியர்களுக்கான தேசமாக அமைத்தனர். பிரிவினையிலிருந்து இன்றுவரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சுமூக உறவு இருந்ததில்லை.
காஷ்மீரைப் பாகிஸ்தானின் ஒரு பகுதி என்றும், அங்கு இஸ்லாமியர்களே பெரும்பானையினர், அதனால் அந்தப் பகுதி பாகிஸ்தானுடன் இணைக்கப் பட வேண்டும் என்று அவர்கள் துவக்கிவைத்த போராட்டம் இன்றுவரை காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கிறது.
இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்பி பல்வேறு சதிகளையும், அவ்வப்போது நேரடியாக யுத்தமும் செய்துவந்தாலும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரு தேசத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இந்திய அரசு எப்போதும் தயாராகவே இருந்துள்ளது.
சுதந்திரம் அடைந்து இந்த அறுபத்துமூன்று ஆண்டுகளில், இந்தியா அனைத்து துறைகளிலும் ஆரோக்யமான வளர்ச்சி கண்டுள்ளது. ஊழல்களும், கலவரங்களும் பல நடந்தாலும், நிலையான அரசாங்கமும், சீரான வளர்ச்சியும் எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்படவில்லை.
ஆனால் பாகிஸ்தானின் நிலையைப் பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். ஜனாயகமும், ராணுவமும் போட்டிபோட்டுக்கொண்டு நிலையான அரசாங்கம் இல்லாமல் செய்துவிட்டார்கள். தகவல் தொழில்நுட்பத்திலும், தொழில் துறையிலும் இந்தியா கண்டுள்ள முன்னேற்றத்தை இன்னும் பாகிஸ்தான் அடையவில்லை.
இந்தியா மீதான தாக்குதல்களிலும், இஸ்லாமிய சகோரத்துவம் என்ற பெயரில் தீவிரவாதத்தைப் பரப்புவதிலும் காட்டிய அக்கறையை தேசத்தின் வளர்ச்சியில் காட்டவில்லை, அந்த நாட்டை ஆள்பவர்கள்.
அதனால் தான் இன்று வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.மக்களின் அவர்சார கால தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் அந்த அரசாங்கம் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். வெள்ளத்தின் பிடியில் சிக்கி துயரப் பட்டுக்கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற, அவர்கள் வளர்த்த எந்தவொரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கமும் முன் வரவில்லை. இஸ்லாத்திற்கு விரோதிகள் என்று அவர்கள் அழைத்த தேசங்களே உதவுகின்றன.
இனியாவது பாகிஸ்தான் அரசாங்கம், இரட்டை வேடம் போடுவதை நிறுத்திவிட்டு, தங்கள் நாட்டு மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். விஞ்ஞானத்திலும், தொழில் துறையிலும், தகவல் தொழில் நுட்பத்திலும் அந்த தேசம் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அந்த வளர்ச்சிப் பாதையில் மட்டுமே அவர்கள் கவனம் இருக்கட்டும்.
காசுக்கு நியூசு : ஊடகங்களின் ஊழல்
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படுவது ஊடகம். மக்களுக்கு செய்தியை கொண்டு செல்வது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக் காட்டும் கடமையும் இந்த ஊடகங்களுக்கு உண்டு. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செய்யும் ஊழல்களை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டும் சக்தி வாய்ந்த துறை.
மேலை நாடுகளில் ஊடகங்கள் அம்பலபடுத்திய ஊழல்களால் ஆட்சியே கவிழ்ந்திருக்கின்றன. அமெரிக்காவின் வாட்டர் கேட் ஊழல் இதற்குச் சிறந்த உதாரணம். அந்த நாட்டில் வெளிவரும் முன்னணி பத்திரிக்கைகளான, Time, Newyork Times, குறிப்பாக Washington Post போன்றவை இந்த ஊழலை வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றினர். அவர்களது பத்திரிகை செய்திகளால் அந்நாளைய அதிபர் Richard Nixon பதவி விலகினார். அமெரிக்க வரலாற்றில் இப்படி ஊழல் புகாரில் சிக்கி பதவி விலகிய ஒரே அதிபர் இவர் தான்.
இத்தகைய சக்திவாய்ந்த ஊடகங்கள் நம் இந்திய தேசத்தில் எப்படிச் செயல்படுகின்றன?
சமீப காலமாக வரும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, இந்த ஊடகங்களிலும் ஊழல் இருப்பது தெரிய வருகிறது.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மகாராஷ்ட்ராவில், 500 கோடி ரூபாய்க்கு மேலும், ஆந்த்ராவில் 300 கோடி ரூபாய்க்கு மேலும், பணம் பெற்றுக்கொண்டு, அக்கட்சிகளுக்குச் சாதகமாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அரசாங்கத்தின் அவலங்களை, மக்களுக்கு உணர்த்த வேண்டிய ஊடகங்களே ஊழல் செய்வது வெட்ககேடானது. ஒரு சில பத்திரிக்கைகள் செய்யும் இதுபோன்ற தவறுகளால், ஒட்டுமொத்த ஊடகத் துறையும் பாதிக்கப்படுகிறது.
ஒரு தேசத்தின் கட்டுமானத்திலும், வளர்ச்சியிலும் ஊடங்கங்கள் பெரும் பங்காற்றுகின்றன. ஒரு அரசாங்கத்தை ஆக்கவும், அழிக்கவும் வலிமை கொண்ட துறை இது.
தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் மக்களை இணைக்கும் சக்தியிது.
பல கலாச்சாரங்களும், மொழிகளும், இனங்களும் நிறைந்த இந்தியா போன்ற தேசத்தில், பத்திரிக்கைகளின் கடமை பெரிது. ஆனால் இந்த வேறுபாடுகளே ஊடங்கங்களுக்கு நம் நாட்டில் சிக்கள்கலாகவுள்ளது.
இந்தியாவின் ஆட்சி மொழியாக வழங்கப் படுவது ஹிந்தி. அரசாங்கம் வெளியிடும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும், ஹிந்தியிலேயே இருக்க முடியும். அல்லது, இன்றைய காலகட்டத்தில், ஆங்கிலத்திலும் அறிவிக்கப்படுகின்றன.
ஆனால் இந்தியாவில் இருப்பதோ பல மொழிகள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மொழி பேசபடுகிறது. ஹிந்தி பொதுவான மொழியாக இருந்தாலும், தமிழகம் போன்ற சில மாநிலங்களில் இந்த மொழி புழக்கத்தில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் தேசம் முழுவதும் ஒரு செய்தியை கொண்டு செல்வது கடினம்.
அதுமட்டுமல்லாது, இன்று தொழில் துறை வளர்ச்சியால், இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளிலும் பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் இருக்கின்றன. அதாவது, தலைநகரில் வெளியிடப்படும் செய்தியொன்று, அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கப்படுகின்றன. இப்படிச் செய்யும்போது, அந்த செய்தியின் பொருள் மாற நிறைய வாய்ப்புள்ளது. அதோடு, சில பத்திரிகையாளர்கள், பணத்திற்காக அந்த மாநில மக்களுக்கு சாதகமானது போல் இந்தச் செய்திகளை மாற்றி எழுகின்றனர்.
இதுபோன்ற பிரச்னைகளால், ஒரு செய்தி, ஒன்று போல தேசத்தின் அனைத்து மக்களையும் சென்று சேர்வதில்லை.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அரசு நிறுவனமான தூர்தர்ஷன் ஒன்று மட்டுமே தொலைகாட்சி சேனலாக இருந்தது. பத்திரிகைகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருந்தது. அன்று தூர்தர்ஷனின் பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் ஹிந்தியிலேயே இருக்கும். ஒளிபரப்பப்படும் படங்களும், ஹிந்திப் படங்களாகவே இருக்கும். அன்றைய நிலையில், அந்த ஹிந்திப் படத்தை பார்க்காதவர் வெகு சிலர். ஆனால் இன்று, எத்தனை பேர் தங்கள் ஊர் தியேட்டர்களில் வெளிவரும் ஹிந்திப் படங்களைப் பார்க்கிறார்கள்?
இன்று ஒரு மொழிக்கு பல சேனல்கள் வந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும் செய்திகளை, தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு ஏற்றவாறு திரித்துக் கூறுகின்றன. இதனால் மக்கள் உண்மையான செய்திகளை அறிந்துகொள்ள முடிவதில்லை.
இந்த நிலை மாற, ஒரே செய்தி நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பத்திரிகைகள் வெளியிட வேண்டும். அந்த நிறுவனம் எந்தக் கட்சி, மொழி, இணச் சார்புமில்லாமல் இருக்க வேண்டும்.
இன்றைய பத்திரிகைகளில் பெரும்பான்மையானவை வியாபார நோக்குடனேயே செயல்படுகின்றன. இதனால் சில செய்திகளுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது.
நாட்டில் நடக்கும் எந்தவொரு ஊழலோ, குற்றமோ மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முதல் பக்கத்தில் இடம்பெறும் ஐந்தாவது நாள், பின்னுக்குத் தள்ளப்படும். அன்றைய தினம் பரபரப்பாக பேசப்படும் வேறு ஒரு செய்தி முதல் பக்கத்திற்கு வரும். மக்கள் பழைய செய்தியை மறந்துவிடுவார்கள்.
இதனாலேயே பெரும் குற்றங்கள் தண்டிக்கப்படாமல் போய்விடுகின்றன. நீதி மன்றத்தில் வழக்குகளும் இழுத்துக்கொண்டே செல்கின்றன.
பத்திரிகைகள் அந்த செய்தியை தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வந்தால், மக்கள் கவனிக்கிறார்கள் என்ற பயத்தில் விசாரணை துரிதமாக நடந்து, விரைவாக முடிவு தெரியும்.
பத்திரிகைகளின் இதுபோன்ற செயல்களால்தான் போலிச் சாமியார்களும், மோசடி பேர்வழிகளும், கைதாகும்போது கொஞ்சம் கூட கவலைபடாமல் சிரித்துக்கொண்டே, புகைப்படங்களுக்குப் போஸ் கொடுக்கின்றனர். சில நாட்களில் மக்கள் இந்தப் பிரச்னையை மறந்துவிடுவார்கள், பின் மீண்டும் அவர்களை புதிய வகையில் ஏமாற்றலாம் என்ற எண்ணத்துடன் சுதந்திரமாக திரிகின்றனர். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய சுவாமி நித்தியானந்தா, இதற்கு சரியான உதாரணம்.
நம் தேசத்தில் இருக்கும் அத்தனை ஊடங்கங்களும் இப்படியிருக்கின்றன என்ற சொல்லவில்லை. நேர்மையான பத்திரிகைகளும் இருக்கின்றன. ஆனால் அவை மக்களிடமிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன.
பொய்மை வாய்மையை மறைத்திருக்கிறது.
ஒரே செய்தி நிறுவனம், இந்தியாவிலுள்ள ஆனைத்து, அல்லது பெரும்பான்மையான மொழிகளில் பத்திரிகைகளை வெளியிட வேண்டும். தங்கள் சுய லாபத்திற்காக செய்திகளை திரித்து கூறாமல், நேர்மையாகச் செயல்பட்டால் மட்டுமே இந்தியாவில் ஊழல் ஒழிந்து, தேசம் நிலையான, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கும்
இது விவகாரத்தில், அரசாங்கம் நேரடியாக தலையிட்டு முடிவெடுக்க வேண்டும்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
நேர்மையான, நிலையான பார்வைகொண்ட ஊடகங்கள் இல்லாது, ஊழலற்ற, வளமான இந்தியாவை உருவாக்க முடியாது.
ஊழல்களை கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியவர்களே ஊழல் செய்தால், எப்படியிருக்கும் வளர்ச்சி?

பதிவுலகத் தோழிகளுக்கு சமர்ப்பணம்!
நான் படித்த இரண்டு விஷயங்கள், சமுதாயத்தில் பெண்களின் நிலையைப் பற்றி என்னுள் சிந்தனைகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாகவே என் கருத்துக்களை இங்கே பதிவு செய்ய விரும்பினேன்.
வார இதழ் ஒன்றில் நடிகை குஷ்புவின் பேட்டியைப் படிக்க நேர்ந்தது. சமூகப் பிரச்னைகளுக்கான அவரது விமர்சனங்களைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில், பெண்களின் மீதான, சமுதாயத்தின் பார்வையை பிரதிபலிப்பதாக இருந்தது. பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தையும் உணர்த்துவதாக அமைந்தது.
இரண்டாவதாக, இன்று காலை நான் படித்த வலைப்பதிவு ஒன்று. வலைப் பதிவர்களிலும் பெண்களை இழிவாகச் சித்தரிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டியது. பெண் பதிவர் ஒருவரைப் பற்றி இழிவாக எழுதப்பட்ட பதிவிற்கு கண்டனம் தெரிவித்து வரையப்பட்ட அந்தப் பதிவு என்னை மிகவும் பாதித்தது.
எங்கே? யார்? என்று குறிப்பிடாமல் அந்தப் பதிவருக்கு கண்டனம் தெரிவித்து எழுதிய தோழி கௌசல்யாவிற்கு (தங்கள் பெயர் அது தான் என்று நினைக்கிறேன்) kousalya2010.blogspot.கம, மற்றும். இந்தப் பதிவுலகத்தில் மகத்தான பங்காற்றிக்கொண்டிருக்கும் அத்தனைப் பெண்களுக்கும் எனது இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.
பெண்ணடிமைத்தனம் ஒழிந்துவிட்டது, பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இன்றைய பெண்கள், என்று நாம் பேசிக்கொண்டிருந்தாலும் பெண்களின் நிலை முழுவதுமாக மாறவில்லை என்பது வேதனையே.
இது பற்றிக் கூறும்போது, நெடுநாட்களுக்கு முன்பு படித்த விஷயமொன்று நினைவுக்கு வருகிறது.
ஆண் எப்போது பெண்ணை தனக்கு அடிமையாக நினைக்கத் தொடங்கினான்? என்று கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்விக்கு, பெண் தன் குழந்தைக்குத் தாய்ப் பால் ஊட்டுவதைப் பார்த்ததிலிருந்து, என்று பதிலளிக்கக்ப் பட்டிருந்தது. இந்த ஒரு பதிலில் பெண்களின் மகத்துவம் முழுதும் உணர்த்தப்பட்டதாக நினைக்கிறேன்.
பெண் என்பவள் போகப் பொருளாகவே இன்றும் பார்க்கப்படுகிறாள். விண்வெளிக்குச் செல்வதிலிருந்து, பாராளுமன்ற அவைகளுக்குத் தலைமை வகிப்பது வரை, பெண்கள் ஆண்களுக்கு சமமாக வளர்ந்துவிட்ட நிலையிலும் அவர்கள் மீதான இந்தப் பார்வை மாறாதது வேதனை.
நடிகை குஷ்பு சொன்னது போல், ஆண் நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது, அவர்களின் தகுதி பற்றி எந்த விமர்சனமும், கேள்வியும் எழுவதில்லை. ஆனால் ஒரு நடிகை அரசியலுக்கு வரும்போது, அவரது சமுதாய அறிவு பற்றியும், ஆளுமை குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
இதற்கு முன்பு ஆந்த்ராவில் நடிகைகள் ரோஜாவும், விஜயஷந்தியும், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அரசியலில் நுழைந்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் இது போன்ற விமர்சனங்கள் எழுவது ஆச்சர்யமாக இருக்கிறது.
சமூகப் பிரச்னைகளுக்கு குஷ்புவின் கருத்துக்கள் விமர்சிக்கப்படுகின்றன. கருத்து சுதந்திரம் உள்ள நமது நாட்டில் யாரும் எத்தகைய கருத்தும் சொல்லலாம்.
மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கே சொந்தம் என்று தாக்கரே குடும்பத்தினர் கருத்து சொல்லும்போது, பெண்களின் நிலை பற்றி ஒரு பெண் சொல்லக்கூடாதா?
பெண் மென்மையானவள் என்று சொல்கிறோம். அனால் அந்த மென்மை உடலுக்குத் தானே தவிர, உள்ளத்துக்கு இல்லை. பெண்களின் உள்ள வலிமை ஆண்களைவிட பன்மடங்கு அதிகமானது. சமூகத்தின் பிரச்னைகளை எதிர்த்து போராடி வெற்றி கண்ட பல பெண்களை நாம் தினமும் பார்க்கிறோம். அப்படி இருந்தும் பெண்களின் மீதான நம் கண்ணோட்டம் மாறவில்லை.
பெண் என்பவள் படுக்கைச் சுகமளிக்க மட்டுமே என்ற இழிவான நினைப்பு, இன்னும் பல ஆண்களின் ஆழ்மனதில் இருக்கிறது. அதன் வெளிப்பாடே இதுபோன்ற விமர்சனங்களும், வக்கிரமான பார்வையும்.
"எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே,
அவர் தீயவராவதும் நல்லவராவதும் அன்னை வளர்ப்பினிலே"
ஒரு மனிதனை ஆக்குவதும் அழிப்பதும் பெண்தான். ஒரு ஆண்மகனை அரவணைத்து வளர்ப்பதும், வாழ்க்கைப் பாதையில் அவன் கைபிடித்து அழைத்துச் செல்வதும் தாயாகிய பெண்தான். அத்தகைய பெண்களை கேவலப்படுத்துவது வேதனையளிக்கிறது.
இத்தகைய இழிவான நிலையை மாற்ற ஒரே வழிதான் உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் மகத்துவத்தை மற்றவர்கள் உணரச் செய்யவேண்டும். உங்கள் தோழியின், சகோதரியின் மேன்மையான குணங்களை மற்றவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அவர்களின் பெருமைகளை உங்கள் சுற்றம் உணரச் செய்யுங்கள். இது தான் பெண்களின் மீதான பார்வை மாற சிறந்த வழி.
இனியொரு விதி செய்வோம்!
நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் மேன்மையைப் போற்றுவோம்!
பதிவுலகில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து, சமூகத்திற்கு மகத்தான சேவைபுரிந்துகொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் எனது இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன். பெண்களின் மீதான தவறான கண்ணோட்டம் மாற என்னால் முடிந்த, சிறு துரும்பைக் கிள்ளிப் போட்டிருக்கிறேன்.
தொடரட்டும் உங்கள் வெற்றி நடை.
வாழ்த்துகள்.

காமன் வெல்த் போட்டிகள் : பிரச்னைகளின் அடுத்த கட்டம்
உலக அரங்கில் தேசமே தலை குனியுமளவு காமன் வெல்த் போட்டிகளின் ஏற்பாடுகளில் ஊழல் நடந்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்போது அந்தப் பிரச்னையின் அடுத்த கட்டம் வந்துவிட்டது. அதாவது இந்த ஊழல் விவகாரங்களின் பின்விளைவு.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் நீச்சல் வீராங்கனை டான் பிரேசர் (73) அந்த நாட்டு விளையாட்டு வீரர்கள் அனைவரும் காமன் வெல்த் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 1972 இல், ஜெர்மனியின் முனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட பதினோரு பேரை பாலஸ்தீன தீவிரவாதிகள் கடத்திச் சென்று படுகொலை செய்தனர். இதுபோன்ற சம்பவம் டெல்லியிலும் நடக்கலாம் என்று அச்சத்தாலே இப்படிக் கூறுவதாக டான் பிரேசர் அறிவித்துள்ளார்.
காமன் வெல்த் போட்டிகளின் ஏற்பாடுகளில் நடந்த ஊழலின் விளைவு பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை ஏற்ப்படுத்தியுள்ளது.என்னதான் ஆஸ்திரேலிய காமன் வெல்த் விளையாட்டு சங்கம் இந்த முன்னாள் வீராங்கனையின் கோரிக்கைகளை நிராகரித்தாலும், உலகம் இந்தப் பிரச்னையின் புதிய பரிமாணத்தைப் பார்க்கத் தொடங்கிவிட்டது.
டான் ப்ரேசரின் சந்தேகம் நியாயமானதுதான் என்றாலும், இந்தப் பிரச்னையை இந்தக் கோணத்தில் அணுகக் கூடாது.
விளையாட்டுப் போட்டிகள் என்பதே தேசங்களின் மத்தியில் நல்லுறவு மலர வேண்டும் என்பதற்க்காகத்தான். வெவ்வேறு கலாசாரம், பண்பாடு, மொழி, இனம், மதம் கொண்ட தேசங்களின் வீரர்கள் இதுபோன்ற விளையாட்டுகள் மூலம் ஓர் நல்லிணக்கத்தை வெளிப்படுத்த முடியும்.
காமன் வெல்த் போட்டிகள் என்பது வளர்ந்துவரும் தேசங்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வு. பலதரப்பட்ட பண்பாடும், பழக்க வழக்கங்களும் கொண்ட தேசங்களின் விளையாட்டு வீரர்கள் ஓரணியாகக் கூடி நடத்தும் திருவிழா.இது போன்ற நிகழ்ச்சியின் மீது இத்தகைய சந்தேகம் வந்தது வெட்கக்கேடானது.
ஆனால் இதற்காக வீரர்கள் போட்டிகளைப் புறக்கணிப்பது தவறு. அப்படிச் செய்தால் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபடுவதன் நோக்கத்திற்கே பங்கம் விளைவிப்பதாகிவிடும்.
தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று போட்டிகளைப் புறக்கணித்தால், அந்தத் தீவிரவாதிகள் வென்றுவிட்டது போல் ஆகாதா? விளையாட்டு வீரர்கள் விளையாடாமலே தோற்றுப்போனது போல் ஆகாதா?
ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ரசிகர் வட்டமுண்டு. அவர்களின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கையில் வீரர்களின் இது போன்ற செயல்கள் அந்த ரசிகர்களுக்கு தவறான முன்மாதிரியாகிவிடும்.
அதற்காக வீரர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரடியாக ஆராயலாம். அதில் குறைகள் இருந்தால் அவற்றைச் சுட்டிக்காட்டிச் சரிசெய்யச் சொல்லலாம். அவற்றில் முழு திருப்தி ஏற்ப்பட்ட பிறகு போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.அதைவிடுத்து போட்டிகளைப் புறக்கணிப்பது தங்கள் தோல்வியை தாங்களே ஒப்புக்கொண்டது போலாகிவிடும்.
ஒருபக்கம் தீவிரவாதமும், மறுபக்கம் இயற்கை சீற்றங்களும் உலகை சிறிது சிறிதாக அழித்து வரும் நிலையில் மனிதநேயம் மலர இது போன்ற நிகழ்வுகள் மூலம் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும். தேசம், இனம், மதம், மொழி என்ற எல்லைகளைக் கடந்து மனிதர்களாக நாம் செயல்பட வேண்டிய தருணமிது. பரவி வரும் பயங்கரவாதத்தைத் தடுக்க ஒரே வழி சக மனிதனிடம் நாம் காட்டக்கூடிய அன்பும் பரிவும் தான்.
தீவிரவாதத்தை அழிக்கக்கூடிய ஒரே ஆயுதம் மனிதநேயம் மட்டும்தான். பிரிவினைகளை உடைத்து மனிதநேயத்தை மட்டுமே பரப்புவோம்.
வாழ்க வையகம்!

கொலைசெய்யும் தண்டனைகள்
சிகரட் லைட்டர் வைதிருந்ததற்க்காக மூன்று மணிநேரம் பெஞ்ச் மேல் நிற்க வைக்கப்பட்ட மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டான் என்று நெஞ்சைப் பதறவைக்கும் செய்தியைப் படித்தேன்.
இது போன்ற சம்பவங்கள் தினமும் தேசத்தின் ஏதாவதொரு மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மாணவர்கள் செய்யும் சிறு தவறுக்கு ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் வழ்கங்கும் தண்டனைகள் அவர்கள் உயிரையே குடித்துவிடுகின்றன.
மாணவப் பருவம் என்பது குழப்பங்கள் நிறைந்த பருவம். வாலிப வயதை நெருங்கும் உயர் கல்வி மாணவர்களின் மனது தெளிவில்லாமலேயே இருக்கும். அந்த வயதில் பார்க்கும் எந்தவொரு விஷயமும் அவர்களை ஆழமாக பாதிக்கும் வாய்ப்புண்டு. இதனாலேயே தண்டிக்கப்பட்டவுடன் தங்கள் வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் தற்கொலை செய்துகொள்கின்றனர் சில மாணவர்கள்.
உலகில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. தவறு செய்யாதவர்கள் மனிதர்களே அல்ல. அதுவும் விவரம் தெரியாத விடலைப் பருவத்தில் தவறு செய்வது வெகு சகஜம். அதற்காக தண்டிப்பது சரியாகாது. தண்டனைகளின் நோக்கமே ஒருவர் செய்த தவறை உணரவைக்கத்தானே தவிர உயிரைப் பறிப்பதற்கு அல்ல.
தண்டனைகளை வழங்கும் ஆசிரியர்கள் அதற்கான காரணத்தையோ அதன் விளைவுகளையோ சிந்திப்பது இல்லை. தங்கள் வீட்டில் நடந்த பிரச்னைகளுக்கான கோபத்தை மாணவர்கள் மீது காட்டும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.இவர்களாலேயே பல மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆசிய்ரியை அடித்ததால் மாணவியின் கை அழுகியதாக ஒரு செய்தியும் படித்தேன்.
மாணவர்களை அடிக்கக் கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்தும் இதுபோன்ற செயல்கள் தொடர்கின்றன. இது போன்ற சம்பவங்கள் நடக்க காரணம் தம் கோபத்தை மாணவர்கள் மீது ஆசிரியர்கள் வெளிப்படுத்துவது தான்.
மாணவர்களின் வாழ்க்கையை நெறிப் படுத்த வேண்டிய ஆசிரியர்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வது அவர்கள் பணியை ஒழுங்காகச் செய்வதில்லை என்பதையே காட்டுகிறது.
மாணவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு பக்குவமாக அவர்கள் செய்த தவறை உணர்த்த வேண்டும். அவர்கள் செய்த செயலின் விளைவு என்னவாக இருக்கும், பின்னால் அத செயல் அவர்களை எப்படி பாதிக்கும், போன்ற விஷயங்களை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
குழப்பங்கள் நிறைந்த வயதில் அவர்களை தண்டித்து அவர்கள் மனநிலை பாதிக்கபடுவதை விட இப்படி புரியவைப்பதே சிறந்தது.
சட்டத்திலேயே மரண தண்டனை வழங்கக் கூடாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது.
மாணவர்களின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த வேண்டிய ஆசிரியர்கள் இம்சைப்படுத்தக் கூடாது. ஆசிரியர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படும்பொழுதுதான் இது போன்ற சம்பவங்கள் நிகழாது இருக்கும்.

அரசாங்கத்தை அலறவைத்த அறவழிப்போராட்டம்
கலவரங்களும் தீவிரவாதமும் மலிந்துவிட்ட நிலையில் உண்ணா விரதம் எனும் அறப்போராட்ட முறை பயனற்றதாகவே தோன்றும். ஆனால் இன்றைய நிலையிலும் உண்ணாவிரதத்தால் வெற்றி காண முடியுமென்பதை நிரூபிக்கும் செய்தியொன்றை படிக்க நேர்ந்தது
வரலாறு என்பதே ரத்தத்தால் எழுதப்படும் காவியம்தான். ஆனால் அந்த ரத்தம் எப்படி சிந்தப்பட்டது என்பதே அந்த சரித்திரத்தின் மீதான பார்வையைத் தீர்மானிக்கும். இருதரப்பிலும் வன்முறையால் ஏற்பட்ட இழப்புகளால் எழுதப்பட்ட வரலாறு அந்த குரூரத்தின் வாடையே கொண்டிருக்கும். பல உத்தமர்களின் உயிர் தியாகத்தால் உருவான சரித்திரம் அவர்களின் பெருமையையும் தியாகத்தையும் காலம் பல கடந்தும் பறைசாற்றிக்கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு சரித்திரம்தான் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு. மகாத்மா என்று போற்றப்பட்ட உத்தமரால், அவர் காட்டிய அறவழியில் அஹிம்சை எனும் ஆயுதம் கொண்டு, பல தேசபக்தர்களின் உயிரை விலையாகக் கொடுத்து பெறப்பட்டது நம் சுதந்திரம். அந்தப் போராட்டத்தில் காந்தியவர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்த சக்திவாய்ந்த போராட்ட முறை உண்ணா விரதம்.
ஆங்கில அரசாங்கம் எழுப்பிய பல பிரச்னைகளையும் தேசத்தில் நடந்த கலவரங்களையும் இந்தப் போராட்டத்தின் மூலமாக முறியடித்திருக்கிறார் காந்தி.
இது நடந்தது முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு. அன்று வேண்டுமானால் இந்தப் போராட்டம் வலிமையானதாக இருந்திருக்கலாம். இன்றய பிரச்னைகளுக்கு இது போன்ற போராட்டங்கள் தீர்வு காண உதவாது என்பதே பரவலான கருத்தாக உள்ளது.
ஆனால் இந்தக் கருத்தை பொய்யாக்கி இன்றும் உண்ணா விரதத்தால் வெற்றி காண முடியும் என்று நிரூபித்திருக்கிறார் விடுதலைப் போராட்ட தியாகியோருவர்.
திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வள்ளியூரில் இருந்து ராதாபுரம் செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் இருக்கிறது தெற்கு குமிளம்பாடு எனும் கிராமத்தில் வசிக்கும் திரு.சுடலைமுத்து. என்பத்தியேழு வயதாகும் இவர் 1942 இல் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற சுதந்திரப் போராட்ட வீரர்.
தமிழக முன்னால் முதல்வர் காமராஜரையும், கக்கனையும் கடவுளுக்கு நிகராக நேசிக்கும் இவர், ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டுமென்று உண்ணா விரதமிருந்து போராடி வெற்றி கண்டிருக்கிறார்.
இதற்கு முன்பாக 1980 களில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, சென்னையிலுள்ள மறைமலையடிகள் நகர் ரயில் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய பிறகும், அதனை தமிழக அரசு மீண்டும் மறைமலையடிகள் பெயரையே சூட்டியதாம். அதனை எதிர்த்து 38 நாள் உண்ணாவிரதம் இருந்து வெற்றிகண்டுள்ளார்.
இந்திய விடுதலைக்குப் பிறகு மட்டும் இவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்களின் எண்ணிக்கை 81 என்கிற தகவலே இவரது குணத்தை நமக்கு விளக்கிவிடும்.
இந்தச் செய்தியைப் படித்தபோது எனக்குள் பல நாட்களாக இருந்த சிந்தனை ஒன்று வலுப்பட்டது. ஆயுதமேந்தாமல், நம்மை அழிக்க நினைப்பவர்களை எதிர்த்து தாக்காமல் எப்படி அற வழியில் போராட முடியும்? நம்மை தாகுபவனை திருப்பித் தாக்கி நம் வலிமையை காட்ட வேண்டாமா? அப்படிச் செய்யாமல் எப்படி இந்த வெற்றி சாத்தியமானது என்று இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைப் படிக்கும்போது ஓர் எண்ணம் ஏற்படும்.
இதனைப் பற்றி மேலும் சிந்தித்தபோது அஹிம்சையின் சக்தியும், வாய்மையின் வலிமையும் மெல்லப் புரிந்தது.
என்னை ஒருவர் அடித்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவரை நான் திருப்பித் தாக்கினால் அவருக்கு கோபமூட்டும்படியே நான் செயல்படுகிறேன். அதனால் அவர் என்னை மேலும் தாக்கவே முனைவார். இருவருமே தாக்கியதால் யார் செய்தது தவறு என்று சிந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
ஆனால் என்னை அடித்தவரை ஒன்றும் செய்யாமல் நான் மெளனமாக இருந்தால், அவருக்கு என் மேல் கோபமிருக்கும் ஆனால் வெகு சிறிது நேரத்திற்கு. பிறகு அது மறைந்துவிடும். அதாவது நான் மெளனமாக இருக்கும் அந்த சிறிது நேரம் மெல்ல அவரது மனதில் சந்தேகத்தை எழுப்பும் "இவன் அமைதியாக இருக்கிறானே? நான் செய்ததுதான் தவறோ?" என்ற எண்ணம் பரவும். அதனை உணர்ந்தவர் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பார். உணராதவர்கள் கோபம் மறைந்து சகஜமாகிவிடுவர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நம்மைத் தாக்கியவரை எதிர்க்காமல் நாம் மௌனம் காக்கும் சில கணங்கள் அவருக்கு உண்மையை உணர்த்துகின்றன. அதனை உணர அவருக்கு நாம் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம்.
இதைத்தான் மகாத்மா வெள்ளையர்களிடம் செய்தார். அவர்கள் செய்த அடக்குமுறைகளை அமைதியாக எதிர்த்தார். அரசாங்க அதிகாரிகளை எதிர்த்துப் போரிட்டு அவர்களைக் கொன்றுகொண்டிருந்தவர்கள் மத்தியில் அவரசாங்கதின் அத்தும்மீரல்களை, வன்முறைகளை பொறுமையாக எதிர்கொண்டார். அவர் காத்த அமைதியின் மூலம் ஆங்கிலேயர்களின் தவறை அவர்களே உணர சந்தர்ப்பமளித்தார்.
அதாவது அவர்கள் செய்வது தவறு என்று சட்டப்பூர்வமாகவோ ஆதரப்பூர்வமாகவோ நிரூபிக்க அவர் முயலவில்லை. மாறாக அவர்கள் மனசாட்சி மூலம் உணர்த்தினார். இதைத் தான் காந்தி வாய்மையின் சக்தியென்று கூறினார்.
அதற்காக இன்றைய நிலையில் தீவிராதிகள் தாக்கினால் அமைதியாக கைகட்டிகொண்டு நிற்க வேண்டுமென்பது அர்த்தமில்லை. நமது தாக்குதல் நம்மை தற்காத்துக்கொள்ள மட்டுமே இருக்கட்டும். அவர்கள் செயலின் வினைகளை உணர சந்தர்ப்பம் கொடுப்போம். அவர்களைச் சுட நமக்குத் துப்பாக்கிகள் தேவையில்லை. அவர்களுக்குள்ளிருக்கும் நிஜமே நமக்காக அதனைச் செய்துவிடும்.
தீவிரவாதத்தையும் வன்முறையையும் கைவிட்டு மக்கள் மனதில் விரோதமும் குரோதமும் பரவாமல் அன்பை மட்டுமே விதைப்போம்.

தீர்வுகாண விரும்பும் மாவோயிஸ்டுகள்.
குடியரசு தினத்தன்றும், சுதந்திர தினத்தன்றும் மக்களுக்கு உரையாற்றுவதே இந்திய ஜனாதிபதியின் தலையாய கடமை என்று கிண்டலாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன இருந்தாலும் இந்த சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி பிரதிபா பாட்டில் நிகழ்த்திய உரை பயன் தருவதாக உள்ளது.
உலகில் பல பிரச்னைகள் பேச்சாலேயே உருவாகியுள்ளன பேச்சாலேயே தீர்ந்தும் உள்ளன. பெரும் புரட்சிகளும் பேச்சாலேயே நிகழ்ந்துள்ளன. ஆளுமை மிகுந்த தலைவரால் சரியான சமயத்தில், தேர்ந்த இடத்தில் பேசப்படும் ஒரு பேச்சு நாட்டில் உள்ள பெரும் குழப்பங்களைத் தீர்த்துவிடும். மாபெரும் தலைவர்கள் பேச்சாலேயே பல பிரச்னைகளைத் தீர்த்துவைத்திருக்கின்றனர் அந்தப் பேச்சுக்கள் இன்றும் நினைவு கூறப்ப்படுகின்றன. ஆபிரகாம் லிங்கனின் தேர்தல் சொற்பொழிவுகள், கென்னடியின் பிரசங்கங்கள், மார்டின் லூதர் கிங் ஜூனியரின் பேச்சுக்கள் என்று மக்களை வசீகரித்த, பல ஆண்டுகால சிக்கல்களை தீர்த்துவைத்த சொற்பொழிவுகள் ஏராளம்.
அந்த வகையிலேயே அமைந்தது அறுபத்துனாங்காவது இந்தியசுதந்திர தினத்தன்று நிகழ்த்தப்பட்ட ஜனாதிபதியின் சொற்ப்பொழிவு.
தனது சுதந்திர தின உரையில் மாவோயிஸ்டுகளுக்கு வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விட்டார் ஜனாதிபதி. பிரதமர் மன்மோகன் சிங்கும் இதனை வலியுறுத்தினார். இதற்கு உடனடியாக பலன் கிடைத்துள்ளது.
தேசத்தின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளால் பெரும் கலவரங்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.நாட்டில் உள்ள ஊழல்களை எதிர்த்து போராடுவதாக சொல்லும் மாவோயிஸ்டுகள் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதனால் ஜனாதிபதியும் பிரதமரும், நக்சலைட்டுகள் மற்றும் காஷ்மீர் இயக்கங்களை பேச்சு வார்த்தை மூலம் சுமூக தீர்வு காண அழைப்புவிடுத்தனர் .
இவர்களின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு வர மாவோயிஸ்டுகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். தேசத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முடிந்து இரண்டு தினங்களுக்குப் பிறகு மாவோயிஸ்டுகள் தலைவர் கிஷன்ஜி மூன்று நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் ஆந்திர முதல்வர் ரோசைய்யா இருவரும் மாவோயிஸ்டுகளின் முக்கியத் தலைவரான் ஆஜாதின் படுகொலைக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்
இருதரப்பிற்கும் பொதுவான நபர்களைக்கொண்டு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இது விஷயத்தில் அரசு மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜீயை வைத்து பேச்சு நடத்த பரிசீலித்துவருவதாகவும் அதனால் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் மாவோயிஸ்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மம்தா பானர்ஜி இல்லையென்றால் எழுத்தாளர் அருந்ததி ராய், சுவாமி அக்னிவேஷ், மேதா பட்கர் போன்ற மாவோயிஸ்ட் அனுதாபிகளின் பெயர்களையும் பரிந்துரை செய்துள்ளனர்.
இறுதியாக மூன்று மாத காலம் போற நிறுத்தம் அறிவிக்கப் பட வேண்டும்.
இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்றினால் பேச்சுவார்த்தைக்கு வரத் தயார் என்று மாவோயிஸ்ட் தலைவர் கோதேஷ்வர் ராவ் என்ற கிஷன்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசும் மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று பச்சைக் கோடி காட்டியுள்ளது.
மம்தா பானர்ஜியும் மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்த சம்மதம் தெரிவுத்துள்ள நிலையில் விரைவில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
ஆயுதங்கள் ஏந்திப் போராடுவதால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தான் மிஞ்சுமே தவிர பிரச்சினைக்கு தீர்வு காண இயலாது. அப்படியே கிடைத்தாலும் நிரந்தரத் தீர்வாக இருக்காது. இது வரலாற்றில் பல முறை நிருபணமாகியுள்ளது.இந்திய சுதந்திரமே அஹிம்சையால் கிடைத்ததுதான். சாத்விகம் தீவிரவாதம் என்று இரு வழிகளில் சுதந்திரத்திற்க்காக போராடினாலும் இறுதியில் மகாத்மா காந்தியின் அறவழிப் போராட்டமே வென்றது.இதனை உணர்ந்து வன்முறையைக் கைவிட்டு மக்களின் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.
இந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் நாட்டில் கலவரங்கள் அடங்கி வளர்ச்சிப் பாதையில் பயணிக்க உதவும். மேலும் இதில் கடிக்கும் தீர்வு தேசத்தில் இயங்கும் மற்ற தீவிரவாத இயக்கங்களும் வன்முறையைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர தூண்டுகோலாக வேண்டும்.
மக்களின் பிரச்னைகளுக்காக போராடுவதாக சொல்லப் படும் மாவோயிஸ்டுகளுக்கு தேசத்தின் சில பகுதிகளில் மக்கள் அதரவு இருப்பதாகவே தெரிகிறது. இது தேசத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவுமானால் ஜனநாயகத்திற்க்கே பெரும் அச்சுறுத்தலாகும் வாய்ப்புள்ளது. அத்தகைய நிலை ஏற்ப்படாமல் தவிர்க்க வேண்டுமால் இது போன்ற சமரச பேச்சு வார்த்தைகளாலேயே முடியும்.
இந்திய அரசாங்கம் பழங்குடி மக்களின் வாழ்வில் அதிக அக்கறை எடுத்துச் செயல்பட வேண்டிய தருணம் இது. அறியாமையும் புறக்கணிப்புமே கண்டு வந்த இவர்களின் நலன்கள் பாதுகாக்கப் பட வேண்டும்.
மேலும் இது போன்ற முக்கிய பிரச்னைகளை ராகுல் காந்தி போன்ற இளம தலைவர்கள் நேரடியாக கையாள்வது சிறந்தது. இதனால் நாம் இன்னும் கடக்க வேண்டிய தூரம் தெளிவாகத் தெரியும். மக்களுக்கும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படும். சிக்கலான பிரச்னைகளில் அவரது அணுமுறை குறித்து உலகிற்கு தெரியவரும்.அவரது ஆளுமையை தேசம் உணர சந்தர்ப்பமாக இருக்கும். ராகுல் இதில் தலையிட்டாலும் இல்லையென்றாலும் அவரது நடவடிக்கைகள் கவனிக்கப் படுமென்பதை அவர் உணர்ந்து செயல்பட வேண்டும்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட இரு தினங்களில் அதற்கு சம்மதம் தெரிவித்ததிலிருந்து அவர்கள் ஒரு சுமூக தீர்வை எதிர்பார்கிறார்கள் என்று தெரிகிறது.இதனை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் நாட்டிற்கு வர இருக்கும் பெரும் ஆபத்துகளையும் இழப்புகளையும் தவிர்ர்து தேசத்தின் முக்கியமான பல பிரச்னைகளுக்கு முடிவு காண முடியும்.
ஒரு மகத்தான மனிதரின் வழிகாட்டுதலில் அற வழயில் போராடி சுதந்திரம் பெறப்பட்ட நாட்டில் வன்முறைப் புயல் அடிக்க வேண்டுமா? அல்லது அமைதி தென்றல் வீச வேண்டுமா என்பதை அரசாங்கமே முடிவு செய்ய வேண்டும்

தமிழின் உயரம்
தமிழ் மொழி. செம்மொழி என்று நாம் போற்றும் தாய் மொழி.அதற்கு விழா எடுத்து மாநாடெல்லாம் நடத்தினோம்.ஆனால் செம்மொழி என்பது என்ன? அந்த கெளரவம் எத்தகைய மொழிகளுக்கு வழங்கப்படுகிறது? இந்த கேள்விக்கு நெடு நாட்களாக பதில் தேடிக்கொண்டிருக்கிறேன் யாரிடம் கேட்டாலும் சரியான பதில் கிடைக்கவில்லை .(அல்லது சரியான பதில் சொல்லக்கூடியவர் யாரையும் எனக்குத் தெரியவில்லை) பிறகு பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய கட்டுரையொன்றில் அந்தப் பதில் கிடைத்தது. அதில் கொடுத்திருக்கும் தகவல்களையே இங்கு பகிர்கிறேன்.
உலகில் பழமையும் பெருமையும் மிக்க மொழிகளாக அறிஞர்கள் போற்றுபவை ஆறு மொழிகள்.
கிரேக்கம்
இலத்தீன்
ஹீப்ரு
தமிழ்
சீனம்
சமஸ்க்ருதம்
இவற்றில் கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு மொழிகள் பேசப்படுவது மிகவும் அரிதாகிவிட்டது
சமஸ்க்ருதம் மந்திரங்கள் நிரம்பியதாக உள்ளதால் அது மறைமொழியாக கருதப்படும் அதுவும் பேச்சுவழக்கில் இல்லை.
சீன மொழியின் எழுத்துக்கள் அறுபதினாயிரம். இதில் ஆறாயிரம் அறிந்தவர்கள் அறிஞர்களாக குறிப்பிடபடுகின்றனர்.
ஆக கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு அதிகம் பேசப்படாத கிட்டத்தட்ட வழக்கொழிந்த மொழிகள். சமஸ்க்ருத மொழியும் பேச்சு வழக்கில் இல்லை. சீன மொழியில் எழுத்துக்கள் அதிகம்.
அப்படிப் பார்த்தல் இன்று உலக அளவில் அதிகம் பேசப்படும் தமிழ் மொழிதான் இந்த பழமையான மொழிகளில் சிறந்தது.
ஒரு மொழி செம்மொழி அந்தஸ்த்து பெற வேண்டுமானால், அந்த மொழி இந்தியா தாண்டி வேறு நாடுகளின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டுமென்பது விதி. தமிழ் மொழி, இலங்கை, மலேசியா, சிங்கபோரே ஆகிய நாடுகளில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த நாட்டு பானங்களிலும் அச்சிடப்பட்டுள்ளது தமிழ் மொழி.
தமிழ் அறிவியலிலும் வெகுவாக பரவியுள்ளது. உலகில் உள்ள நாடுகளையெல்லாம் இணைத்திருக்கும் இணையத்தில் அதிக வலைத்தளங்களைப் பெற்றிருப்பது ஆங்கிலம். அடுத்ததாக ஸ்பானிஷ்.
இந்திய மொழிகளில் அதிக வலைத்தளங்களைகொண்டது தமிழ் மொழி. இந்தப் பெருமைக்குக் காரணம் இந்தியாவில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல. உலகம் முழுக்கப் பரவியுள்ள தமிழ் சமுதாயம்தான்.
இன்று வலைபூ எனப்படும் வலைபதிவுகளிலும் அதிக பதிவுகள் தமிழ் மொழியில்தான் உள்ளன.
இதைப் படித்த எனக்கு தமிழின் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன என்று சிந்திக்கத் தோன்றியது. கூடவே இத்தகைய பெருமைகளைக் கொண்ட தமிழ் மொழியின் இன்றைய நிலை தமிழகத்தில் எவ்வாறு உள்ளது என்றும் கேள்வி எழுந்தது.
இதக்கு விடையாக எனக்குத் தோன்றியதென்னவோ திராவிட இயக்கங்கள்தான் . அவர்கள் ஹிந்தி திணிப்பை எதிர்த்துப் போராடினார்கள். அதனால் மக்கள் ஹிந்தியை புறக்கணித்தனர். ஆனால் ஆங்கிலத்தை நேசிக்கத் தொடங்கினர். மற்ற மாநிலத்தவரைவிட ஆங்கிலம் அழகாகவும் சரளமாகவும் பேசினார்கள் தமிழர்கள். அடஹ்ன் விளைவாக அதிகளவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றனர். அங்கு சென்ற பிறகும் தமிழ் மொழியை மறக்காமல் இணையத்தில் அதனைப் பதிவு செய்தனர்.
திராவிட இயக்கத்தினர் அன்று ஹிந்தி மொழியை எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால், இன்று தமிழ் மொழி இந்த அளவு வளர்ந்திருக்குமா? என்று சந்தேகமாகவே உள்ளது..
தமிழ் உலகம் முழுக்கப் பரவியிருந்தாலும் தமிழ் நாட்டில் அதன் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. இங்கு தமிழ் பேசுவது அரிதாகவே உள்ளது. பிட்சா, பர்கர் என்று உணவிலுருந்து பாப் அல்பங்கள் என்று இசைவரை அனைத்தும் ஆங்கிலமயமாக இருக்கும்போது பேசும் மொழி மட்டும் தமிழாக இருந்தால் நல்லா இருக்குமா?
எந்த ஒரு பொருளின் மதிப்புமே அருகிலிருக்கும்போது தெரியாது. தொலைத்த பிறகு தான் வருந்துவோம். அதுபோல தமிழையும் தமிழ் நாட்டில் இருக்கும்வரை உணராது அயல் நாடுகளுக்குச் செல்லும்போது அதன்பெருமையை அறிகிறோம்.
தமிழ் இன உணர்வு, தமிழனின் போராட்டம், தமிழ் இன எழுச்சி என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதைவிட தமிழ் நாட்டில் தமிழின் மகத்துவத்தை உணர்த்தி இளைஞர்களிடையே மாற்றத்தை கொண்டுவர முயற்சி எடுக்க வேண்டும்.

தனக்கு வந்தால் மட்டும் தடை
கடன் வேணுமா? கிரெடிட் கார்டு வேணுமா? என்று கேட்டு இனி யாரும் அலைபேசிகளில் தொல்லை கொடுக்க முடியாது. இந்த அழைப்புகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏன் இந்த திடீர் தீவிரம். பல ஆண்டுகளாக தொல்லை கொடுத்து வந்தவர்களை இன்றுதான் அடையாளம் கண்டுகொண்டது போல் செயல்படுவது ஏன்?
காரணம் தமாஷ்தான்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாராளுமன்ற அமளி தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தபோது, அவரது அலைபேசியில் ஒரு அழைப்பு வந்ததாம். ஏதோ முக்கிய அழைப்பாக இருக்குமென்று என்று எடுத்த அமைச்சரிடம் "உங்களுக்கு வீட்டுக் கடன் வேண்டுமா?" என்று யாரோ கேட்டார்களாம்.
அவ்வளவுதான். கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் பிரணாப். அதனால் தான் இந்த்த தடை நடவடிக்கையாம்.
அது சரி, இந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு வந்தால்தான் எதையும் செய்வார்கள். இதுவரை எத்தனைப்பேருக்கு, நெரிசலான சாலைகளிளில் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போதும், ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்போதும், முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும்போதும் இதுபோன்ற அழைப்புகள் வந்து தொல்லை கொடுத்திருக்கும்?
அரசியல்வாதிகளை பாதித்தால் உடனடி நடவடிக்கைதான்.

கோஷ்ட்டிகளை ஒழிக்கும் இளைஞர் காங்கிரஸ்?
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி வளர்ப்பதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டியுள்ளார் தமிழ் நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் .
காங்கிரஸில் கோஷ்டிகள் உள்ளதும் தொண்டர்களைவிட தலைவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. பின் எதற்க்காக திடீரென்று இந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் திடீரென்று கார்த்தி சிதம்பரத்தை தாக்கியுள்ளார்?
நாகப்பட்டினத்தில் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டையை விதிமுறைகளை மீறி வழங்கியிருக்கிறார் என்று அவர் மீது குற்றம் சுமத்தி கட்சிக்குள் கோஷ்டி வளர்ப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியிடம் புகார் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழக இளைஞர் காங்கிரஸில் எதோ மாற்றங்கள் நிகழ்நது வருகின்றன. ஆனால் அவை எத்தகைய மாற்றங்கள் என்று உணர முடிவதில்லை. கட்சிக்குள்ளிருக்கும் வேறுபாடுகளை அகற்றி பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை மலரச் செய்யும் மறுமலர்ச்சியா? அல்லது உட்கட்சிப் பூசலை பரவ விட்டு கட்சியின் மதிப்பை இன்னும் குறைப்பதா? என்று oogikka முடியவில்லை.
வடக்கே உத்திர பிரதேசமும் தெற்கில் தமிழகமும் ராகுல் காந்தியின் எதிர்கால திட்டங்களில் முக்கிய இடங்களாக சொல்லப் படும் நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் அகில இந்தியா அளவில் வெகுவாக கவனிக்கப்படுகின்றன.
பல கோஷ்டிப் பூசல்களுக்கு மத்தியில் இளைஞர் காங்கிரஸ் தலைவரை தேர்தல் வைத்து தேர்ந்தெடுத்தது பாராட்டப்பட்டாலும், வெற்றி பெற்ற யுவராஜ் ஜி.கே.வாசனின் ஆதரவாளர் என்ற முணுமுணுப்புகளும் எழத்தான் செய்தன.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாமுக்கு ராகுல் காந்தி திடீர் விஜயம் செய்ததும் கட்சியில் ஆரோக்யமான மாறுதல்கள் தெரிவதாக பேச்சு எழுந்தது.
தி.மு.க வின் நிறுவனர் அண்ணா அவர்களின் எழுச்சிக்குப் பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மங்கிப் போனது. காமராஜர், கக்கன் போன்ற பெரும் தலைவர்கள் இருந்த கட்சிக்குள் பூசல்கள் ஏற்பட்டு பெருமையையும் பாரம்பரியத்தையும் இழந்தது.
இந்திரா காந்தி காலத்தில் டெல்லியிலோ மற்ற மாநிலங்களிலோ எந்த குழப்பமானாலும் தமிழக முன்னால் முதல்வர் காமராஜ் அவர்கள் தீர்த்துவைக்க அழைக்கப்படுவார். ஆனால் இன்று கட்சியில் ஆயிரம் பிரச்னைகள் வந்தாலும் தீர்ப்பதற்கு ஆளில்லாத நிலை.
இத்தகைய பெருமை கொண்ட தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை ஸ்தாபிப்பததன் மூலம் தெற்கில் காங்கிரசுக்கு வலுவான அடித்தளம் அமைக்கலாம் என்பது ராகுலின் கணக்கு.
அதே போல் வடக்கே உ.பி போன்ற பெரிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதன் மூலம் தேசிய அளவில் கட்சியின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று ராகுல் காந்தி கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தான் தமிழகத்தில் இப்படிப் பட்ட புகார் எழுந்துள்ளது.
ராகுல் காந்தி அகில இந்திய அளவில் கட்சியில் இளைஞர்களை புகுத்தி கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி வருகிறார். ஒவ்வொரு மாநிலமாக கட்சியின் அஸ்திவாரத்தை பலப்படுத்தி வருகிறார்.தமிழகத்தில் மட்டுமலாது பல மாநிலங்களிலும் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல்கள் இருப்பதாலேயே இத்தகைய செயல்பாடுகளை அவர் மேற்கொண்டு வருகிறார் என்றே தோன்றுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மலர்வதால் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. அதனால் நம் மாநிலத்திற்கு வளர்ச்சித் திட்டங்களை பெருமளவில் செயல்படுத்த முடியும்.தேசிய அளவில் பெரும்பான்மையான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் பட்சத்தில் கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியின்றி ஆட்சி செய்ய முடியும். இதனால் பல முக்கியமான பிரச்னைகளுக்கு தைரியமான முடிவுகளை எடுக்க முடியும்.
ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் காங்கிரஸ் கட்ச்க்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விலைவாசி உயர்வு, மாவோயிஸ்டுகள் தாக்குதல், காஷ்மீர் கலவரம் என்று பல பிரச்னைகளும் விமர்சனங்களும் ஆளுங்கட்சியின் மீது உள்ளது.
ஆனால் இவற்றை மட்டும் வைத்து தேர்தல் முடிவை ஊகிக்க முடியாது. எதிர்க் கட்சிகளின் நிலையையும் ஆராய வேண்டும்.
முக்கிய எதிர்க் கட்சியான பா.ஜ,க. வை எடுத்துக்கொண்டால் திறமையான நிர்வாகத்தையும், நிலையான ஆட்சியையும் தர முடியுமென்றாலும் இவர்களது ஹிந்துத்வா கொள்கையும், இஸ்லாமிய விரோத நடவடிக்கையும் உள்நாட்டுக் கலவரங்களுக்கு வழிவகுத்துவிடும். தேசிய பாதுகாப்பில் இவர்கள் கண்டிப்புடன் இருந்தாலும் உள்நாட்டில் இவர்களால் அமைதியை காப்பாற்ற முடியாது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை அதன் பெரும் பலவீனம் முடிவுகளை எடுக்கத் தடுமாறுவது தான். விலைவாசி உயர்வு, நக்சலைட்டுகள் போன்ற முக்கிய பிரச்னைகளில் துணிச்சலான முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறுகிறது.
இந்த நிலைக்கு முக்கியமாக கட்சிக்குள் உள்ள பூசலும் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தமும் காரணங்களாக இருக்கலாம்.
இதனாலேயே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி, பெருவாரியான பகுதிகளில் காங்கிரஸ் ஆட்சியை நிறுவ திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் ராகுல்.
இதனை உணர்ந்து தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த தங்கள் உண்மையான உழைப்பை தர வேண்டும்.
இன்றைய நிலையில் தமிழகத்தில் கலைஞரும் ஜெயலலிதாவும் மாறி ஆட்சி அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களோ அவர்களின் ஆட்சியில் திருப்தியில்லாமல் ஒரு மாற்றத்தை எதிர் பார்த்துக் காத்திருக்கிறார்கள். நம் மாநிலத்தில் இந்த திராவிட கட்சிகளுக்கு சரியான மாற்றாக காங்கிரஸ் மட்டுமே இருக்க முடியும்.பா.ஜ.க. போன்ற கட்சிகளின் கொள்கை நமக்கு ஒத்துவராத நிலையில் காங்கிரஸ் கட்சியாலேயே மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொடுக்க முடியும்.
ராகுலின் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப் படுமானால் தமிழகத்தில் மட்டுமல்ல, தேசத்தின் முக்கிய மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைய முடியும். அப்படிப் பட்ட சூழ்நிலை அமையுமானால், தேசத்தின் பல பிரச்சனைகளுக்கு தைரியமான சில முடிவுகளை எடுக்க முடியும்.
இதனை மனதில்கொண்டு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேசத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.

மாறுபட்டு சிந்தியுங்கள்
பெரிய பெரிய அறிஞர்களெல்லாம் மாத்தி யோசி, புதிதாக யோசி புதிய கோணத்தில் பாருங்கள் என்று சொல்கிறார்களே இதற்க்கு என்ன அர்த்தம்? எப்படி புதுமையாக யோசிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த அறிஞர்களுக்கு வேறு வேலை இல்லை. ஞானி போல் பேச வேண்டுமென்று யாருக்கும் புரியாத மாதிரி பேசுவார்கள் என்று கூட நினைத்தேன்.
ஆனால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பற்றிய கட்டுரையொன்றை படித்த பொது இதற்க்கான விளக்கம் கிடைத்தது.
கலைவாணர் அவர்கள் ஒரு பள்ளி விழாவில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அது ஒரு ஆரம்பப்பள்ளி என்பதால் அந்தக் குழந்தைகளுக்கு புரிவது போல் தன பேச்சு இருக்கவேண்டும் என்று இப்படி ஆரம்பித்தார்.
"ஒரு ஊர்ல ஒரு முயலும் அமையும் இருந்துச்சாம்.அது ரெண்டும் ஒரு நாள் ஓட்டப் பந்தயம் வச்சுச்சாம்"
என்று அவர் பேசும்போதே குழந்தைகள் தெரியும் தெரியும் என்ற கத்தினார்கள்.
"என்ன தெரியும்?" என்று கேட்டார் கலைவாணர்
"ஆமை ஜெயிச்சுரும் முயல் தோத்துரும்" என்று ஆரவாரம் செய்தனர் குழந்தைகள்.
இதைக் கேட்ட என்.எஸ்.கிருஷ்ணன்
"அப்படித்தான் சொல்லக் கூடாது. முயல் ஆமையால் தோற்றது என்று சொல்லவேண்டும். அதாவது முயல் + ஆமையால் தோற்றது. முயலாமையால் தோற்றது. நீங்களும் முயற்சி செய்யாமல் இருந்தால் தோற்றுவிடுவீர்கள்" என்று விளக்கினர்.
எல்லோரும் அறிந்த கதையை, பல முறை சொல்லப் பட்டவொரு கதையை அவர் ஒரு புதிய கோணத்தில் அணுகினார். அதனால் அந்தக் கதையின் பொருளே மாறிவிட்டது.
இது போல தாமஸ் அல்வா எடிசனின் வாழ்க்கையில் நடந்த சம்பவமொன்று புதிய கோணத்தில் பார்ப்பது என்று விளக்குகிறது.
மின்சார பல்பைக் கண்டுபிடித்த எடிசன் அதனை உருவாக்குவதற்கு பல்வேறு இழைகளை பயன்படுத்திப் பார்த்தார். ஒரு முறை இரு முறையல்ல 1000 முறை. பிறகு தான் கடைசியாக TUNGSTEN என்ற இழையைப் பொருத்தி அந்த பல்பை இயக்கினார்.
இது பற்றி ஒரு பத்திரிக்கை நிருபர் எடிசனிடம் "நீங்கள் ஆயிரமாவ்ந்து முயர்ச்சியாகத் தான் tungsten என்ற இழையைப் பொருத்தி வெற்றி கண்டுள்ளீர்கள். அப்படியானால் நீங்கள் 999 முறை தோற்றுத் தானே போனீர்கள்?" என்று கேட்டராம்.
அதற்கு எடிசன் "இல்லை.நான் 999 முறை எப்படி பல்பை உருவாக்க முடியாது என்பதை அறிந்து கொண்டேன். அதனாலேயே ஆயிரமாவது முறை வெற்றிகரமாக செய்ய முடிந்தது" என்றார்.
புதிதாக சிந்திப்பது எப்படி? எண்ணங்களை மாற்றுவது எப்படி? என்று பல புத்தகங்கள் படித்தும் புரியாதது இந்த இரண்டு சம்பவங்களைப் பார்த்து மிகத் தெளிவாக புரிந்தது.

நாம் அறிந்த சுதந்திரம்
இன்றோடு நம் தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்து 63 வருடங்களாகின்றன. இதற்காக அனைவருக்கும் முதலில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனைப் பற்றிப் பேசும்போது தமிழ் வார இதழ் ஒன்றில் நான் படித்த இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒரு கேள்வி பதில் பகுதியில், "யாரோ எழுதி. யாரோ இசைஅமைத்து யாரோ பாடிய பாடலை வெட்கமில்லாமல் தங்கள் அக்கா மகளுக்கு டெடிகேட் செய்கிறார்களே?" என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு கூறப்பட்ட பதில் சிந்திக்க வைத்தது. "யாரோ போராட, யாரோ ரத்தம் சிந்தி, யாரோ உயிரைக் கொடுத்து வாங்கிய சுதந்திரத்தை நாம் வீனாக்குவதில்லையா? அதுபோலத் தான்."
இந்தப் பதில் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது.நாம் பல உத்தமர்களின் உயிரை விலையாகக் கொடுத்துப் பெற்ற சுதந்திரத்தின் இன்றைய நிலை என்ன? அப்படிப் பெற்ற சுதந்திரத்திற்கு பலன் இருக்கிறதா? அந்த சுதந்திரம் அனைத்து வர்க்க மக்களுக்கும் சென்றடைந்திருக்கிறதா? என்று பல கேள்விகள்.
இன்றைய மக்கள் சுதந்திரத்தை எப்படிப் பார்க்கிறார்கள்? எப்படிப் பயன்படுத்துகிறார்கள்?
இளைஞர்களுக்கு, சுதந்திரம் அவர்கள் விரும்பிய படிப்பைப் படித்து அதிக சம்பளம் கொடுக்கும் ஏதோவொரு நாட்டிற்கு வேலைக்குச் செல்வது. வார இறுதி நாட்களில் நண்பர்களோடு பாரில் குடித்துவிட்டு அதனை relaxation என்று சொல்வது
பெண்களுக்கு சுதந்திரம் அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிவது. ஆண்களுக்கு நிகராக மது அருந்துவது புகைப் பிடிப்பது. கலாச்சாரத்தைப் பற்றி கவலைப் படாமல் ஆண்களுடன் எல்லை மீறிப் பழகுவது.
அரசியல்வாதிகளுக்கு, என்ன செய்தேனும் பதவியைப் பிடித்து மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது. செய்யக் கூடாது என்று கூறப் பட்ட அனைத்துப் பாவங்களையும் செய்வது.
அப்பாவிகள் என்று வர்ணிக்கப் படும் பொது மக்களுக்கு, தேர்தலின்போது கட்சிகள் கொடுக்கும் இலவசப் பொருட்களையும் பணத்தையும் வாங்குவது. மன நிம்மதி தேடி போலிச் சாமியார்களை நாடிச் செல்வது.
ஒடுக்கப் பட்ட மக்களுக்கு, "நம் உரிமைகளுக்காக போராடுவோம்" என்று அழைக்கும் அவர்கள் இனத் தலைவர்களை நம்பி ஏமாறுவது.
இதுதான் இந்தியாவில் சுதந்திரத்தின் இன்றைய நிலை.
இதைப் பற்றிக் கூறும்போதுதான் படித்த இரண்டாவது விஷயம் நினைவுக்கு வருகிறது.
சுதந்திரமடைந்த சில ஆண்டுகள் கழித்து பிரதமர் நேரு ஒரு விழாவில் கலந்துகொண்டுவிட்டு தலைநகர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞன் அவரது காரை வழிமறித்தான். காரிலிருந்து இறங்கிய நேரு அவனிடம்
"என்ன பிரச்சினையப்பா உனக்கு?" என்று கேட்டார்.
"நான் படித்து முடித்து வெகு நாட்களாகிவிட்டன. ஆனால் எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இப்படி வேலையில்லாமல் அலையத்தான் சுதந்திரம் வாங்கித் தந்தீர்களா? அந்த சுதந்திரத்தால் யாருக்கு என்ன பயன்?" என்று கேட்டான்.
நேரு அமைதிகாக புன்னகையுடன் "ஒரு பிரதமரைப் வழிமறித்து இப்படிக் கேள்வி கேட்கிறாயே இதற்காகத் தான் சுதந்திரம்." என்று கூறிவிட்டு அவனது பிரச்னையை தீர்த்து வைப்பதாக உறுதியளித்து விட்டு சென்றார். அது போலவே தலைநகர் சென்றவுடன் அவனுக்கு வேலைக்கும் ஏற்பாடு செய்தார்.
நாம் பெற்றிருக்கும் சுதந்திரத்தின் வலிமையை இந்த சம்பவம் பூரணமாக உணர்த்துகிறது.
இன்று எத்தனை இளைஞர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்ற தங்களுக்குள்ள சுதந்திரத்தை உணர்ந்திருக்கிறார்கள்.?
பொது மக்களில் எத்தனை பேர் தங்களை ஆளும் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை அறிந்திருக்கிறார்கள்?
அப்படியானால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா வளர்சியடையவில்லையா?
நாம் வளர்சியடைந்திருக்கிறோம். உலக நாடுகள் பிரமிக்கும் அளவிற்கு இந்த அறுபத்துமூன்று ஆண்டுகளில் வளர்ந்திருக்கிறோம். அனால் அந்த வளர்ச்சி அனைவரையும் சென்று சேரவில்லை. முழுமையாகவில்லை. என்பதே உண்மை.
சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளில் பெருமைப்படக் கூடிய விஷயங்களும் உண்டு.
ஜான் ஸ்ட்ராச்சி என்னும் பிரிட்டிஷ்காரர் இந்தியாவைப்பற்றி எழுதிய ஒரு புத்தகத்தில் "ஒரு வசதிக்காக, பல வேறுபட்ட நாடுகள் சேர்ந்த ஒரு பகுதிக்கு, இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கலாச்சாரத்தாலும், மொழியாலும், இனத்தாலும் வேறுபட்ட மக்கள் எப்போதும் ஒரே தேசமாக இருக்க முடியாது. கடந்த காலத்தில் இந்தியா என்றொரு தேசம் இருந்ததில்லை. இனி வரும் காலங்களிலும் இருக்கப் போவது இல்லை" என்று எழுதினார்.
அவரது கருத்தை நாம் பொய்யாக்கிவிட்டோம். சுதந்திரம் கிடைத்து நாம் நிலைத்திருக்கிறோம். ஒரே தேசமாக.இதுதான் நமது வெற்றி. பல்வேறு இனம், மொழி, பண்பாடு கொண்ட மக்கள் இந்தியா என்ற ஒரு குடையின் கீழ் இணைந்திருக்கிறோம்.
இந்த ஒற்றுமை. இந்த தேசிய உணர்வு ஒவ்வொரு விஷயத்திலும் இருந்து நாட்டை நாம் மேலும் வளம்பெறச் செய்ய வேண்டும். அதற்க்கான சக்தி,சுதந்திரமென்னும் மஹா சக்தி நம்மிடையே இருக்கிறது. அதை முழுமையாக உணர்ந்து தேசத்தின் வளர்ச்சிக்காக உழைப்போம்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
ஜெய் ஹிந்த்!

Subscribe to:
Posts (Atom)
தலைப்புகள்
- அரசியல் (4)
- அலசல் (1)
- ஆன்மிகம் (5)
- எனது பார்வையில் (18)
- தத்துவம் (7)
- படித்ததும் பாதித்ததும் (9)
- பிரபலங்களின் வாழ்க்கையில் (11)
- விமர்சனம் (1)
நான் - ஒரு சுய அறிமுகம்
- STP
- Madurai, Tamil Nadu, India
- இந்த உலகத்தை வாழச் சிறந்த இடமாக மாற்றும் முயற்சியில் ....