குறுஞ்செய்தியில் நல்ல செய்தி

சில தினகளுக்கு முன்பு, தினமணி நாளிதழிலில் வெளியான கட்டுரையொன்று என்னை சிந்திக்க வைத்தது. செல் போன்களில் வரும் SMS கள் பற்றிய அந்த கட்டுரை, நகைச்சுவையாக எழுதப்பட்டிருந்தாலும், அதில் சொல்லப்பட்ட விஷயங்கள், சிந்திக்க வேண்டியவை.

நம் மொபைல்களில் தினம் தினம் பல்வேறு பார்வர்ட் மெசேஜுகள் வருகின்றன. அவற்றில் பாதி மெசேஜுகள், இந்த மெசேஜை இத்தனை பேருக்கு அனுப்பினால், நன்மை நடக்கும்; இந்த எண்ணகளில் இருந்து தங்களுக்கு அழைப்பு வந்தால், எடுக்க வேண்டாம். அது உங்கள் மொபைலை செயலிழக்கச் செய்துவிடும்; யாரோ ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார், அவருக்கு உதவ இந்த SMS ஐ இத்தனைப் பேருக்கு அனுப்புங்கள், ஒரு மெசேஜுக்கு பத்து பைசா வீதம், பணம் கொடுக்க மொபைல் கம்பெனி முன்வந்துள்ளது; இது போன்ற மெசேஜுகள் தான்.

இவற்றை எத்தனை பேர் பின்பற்றி, குறிப்பிட்டபடி செயல்படுகிறார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், இது போன்ற மெசேஜுகள் வராத செல் போன்களே கிடையாது. இவை பார்பதற்கு மூட நம்பிக்கை போலத் தோன்றினாலும், நான் இதனை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.

இந்த மெசேஜுகள் பல சமயம் அபத்தமாக இருந்தாலும், சேற்றிலும் செந்தாமரை முளைப்பது போல, இவற்றிலும் சில சமயம் நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அதாவது, ஏதோவொரு மந்திரத்தையோ, அல்லது வாசகத்தையோ குறிப்பிட்டு, இதனை இத்தனை பேருக்கு அனுப்பினால், நன்மை நடக்கும் என்று சொல்லப்படுகிறது என்றால், அது உண்மையோ இல்லையோ, அதில் நன்மை நடக்க ஒரு வாய்ப்பிருக்கிறது அல்லவா. இந்த குறுஞ்செய்திகளைப் படிப்பவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ, ஆனால், அவர்கள் மனத்தில் நினைத்திருக்கும் ஏதோவொரு விஷயம் நடப்பதாக நினைத்துப் பார்ப்பார்கள், அதுவே அந்த விஷயம் நிறைவேறுவதற்கு வாய்ப்பாக அமையலாம்.நம்மையும் அறியாமல் நிகழக்கூடிய சம்பவம் இது.

உதாரணமாக, உங்களுக்கு, ஒரு மந்திரத்தை அனுப்பி, அதை நீங்கள், இருபது பேருக்கு அனுப்பினால், நீங்கள் நினைத்தது நடக்கும், என்றொரு குறுஞ்செய்தி வருகிறதென்று வைத்துக்கொள்வோம், உங்களையும் அறியாமல், அதைனைப் படித்தவுடன் நீங்கள் எதிர்பார்த்த்திருந்த ஒரு விஷயம் நிறைவேறுவதாக நினைப்பீர்கள். அந்த எண்ணம்தான் இதுபோன்ற குறுஞ்செய்திகளால் ஏற்படும் நன்மை.

இதைப் போலவே, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு உதவ, இந்த செய்தியை, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பவும். என்று வரும் SMS களை, நம்பவில்லைஎன்றாலும், அந்த நபர் நலம்பெற வேண்டும் என்று நிச்சியம் நினைப்பார்கள். இப்படி நூற்றுக்கணக்கான பேர் நினைத்தால், அந்த எண்ணம், ஒருவரது உயிரைக் காப்பாற்றக்கூடிய வல்லமை கொண்டதாக இருக்கும்.

தினம் தினம் நம்மையும் அறியாமல் பல தவறுகளையும் பாவங்களையும் செய்கிறோம். அப்படி நம்மையும் அறியாமல் செய்யப்பட ஒரு நன்மையாக இந்த குறுஞ்செய்திகள் இருக்கட்டுமே.

ஜார்கண்ட் சட்டசபையில் வாஸ்த்து சாஸ்த்திரப் படி இருக்கைகள் மாற்றி அமைக்கப்படுவதை விட, இவை ஒன்றும் மூட நம்பிக்கைகள் அல்ல. அப்படியே மூட நம்பிக்கையாக இருந்தாலும், இந்த நம்பிக்கையால் நன்மைகள் நடந்தால், இதனை ஆதரிக்கலாம் அல்லவா

3 கருத்துரைகள்:


ஜார்கண்ட் சட்டசபையில் வாஸ்த்து சாஸ்த்திரப் படி இருக்கைகள் மாற்றி அமைக்கப்படுவதை விட, இவை ஒன்றும் மூட நம்பிக்கைகள் அல்ல. அப்படியே //
தமிழ்நாட்டு சட்டசபையும்,சட்டசபை கட்டிடமும் அப்படித்தான் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது.தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் வாசல் வழியாக போக பயந்துகொண்டு பின்னால் சுற்றுசுவை குடைந்து போகப்போகிறார்களாம்



settingS சென்று word verification ஐ எடுத்து விடுங்கள் கமெண்ட் போட முடியல



வெட்டியா பொழுது போகலனால் எந்த மொக்கையான மெசேஜ் ம் பார்வர்ட் பண்ணலாம்..இந்த மந்திரம் மெசேஜ் கூட..இதெல்லாம் ப்ரீ எஸ்.எம்.எஸ் னாலே தான்...துட்டு நாள் பண்ணுவோமா? மூட நம்பிக்கை இல்லை...மொக்கைய போட இதுவும் ஒரு வழி..ஆனால்..வித்யாசமா வேற ஆங்கிளில் யோசிசுருக்கிங்க..குட்..


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U