தொலைகாட்சி, சினிமா என்று பல பொழுதுபோக்கு அம்சங்கள் வந்த பின்பும் புத்தகங்கள் தங்களுடைய மதிப்பை இழக்கவில்லை. இன்றைய சிறுவர்களிடமும் கல்லூரி மாணவர்களிடமும் புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைத்திருந்தாலும், மழுங்கிவிடவில்லை. புத்தகங்கள் நமது கற்பனை சக்தியை வளர்க்கின்றன. இந்த உலகில் உள்ள பல விஷயங்களைப் பற்றியும் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் படிக்கும் பாடப் புத்தகங்களைத் தவிர இந்த உலகம் என்னும் கடலை அளக்க உதவுவது இந்த புத்தகங்களே. இணையத்தை போலல்லாது புத்தகங்களின் நம்பகத்தன்மையும் அதிகம்.
சமீபத்தில் ஒரே கருத்தைப் பற்றிய மூன்று புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது. இரண்டு ஆங்கில புத்தங்களும் ஒரு தமிழ்ப் புத்தகமும். The Secret, The Power of your Subconscious Mind என்ற ஆங்கிலப் புத்தகங்களும், அடுத்த வினாடி என்ற தமிழ் புத்தகமும். இம்மூன்று புத்தகங்களும் இந்த உலகில் உள்ள ஒரு ஒப்பற்ற சக்தியைப் பற்றி விளக்குகின்றன. இந்த பிரபஞ்சத்தை இயக்கம் சக்தியைப் பற்றி விரிவாக அலசுகின்றன. நமது மனமே அந்த சக்தி.
நமக்குத் தேவையான அனைத்தும் நம்மிடமே உள்ளது. நமது மனம் நம்மை இயக்குகிறது. அதனை இயக்க நாம் கற்றுக்கொண்டால் நமது லட்சியங்களை எளிதாக அடைய முடியும். நமது எண்ணங்களே நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பதை இந்த புத்தகங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
நமது மனத்தில் நாம் விதைக்கும் எண்ணங்கள் நமது வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்கின்றன. நாம் மனத்தில் நினைத்த விஷயம் ஒன்று நிஜத்தில் நடத்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும். உதாரணமாக நாம் எதோ ஒரு சினிமா பாடலைப் பற்றி சிந்தித்துக் கொண்டோ அல்லது பாடிக்கொண்டோ இருக்கும்போது அந்த பாடல் சிறிது நேரத்திற்குள் எதோ ஒரு தொலைக்காட்சியிலோ வானொலியிலோ ஒலிப்பதை நாம் கேட்டிருப்போம். இதற்க்குக் காரணம் நமது எண்ணங்களே. நம்மையும் அறியாமல் நமது ஆழ்மனதில் அந்த பாடலைப் பற்றி நாம் சிந்திதிருக்கிறோம். அது பின்னர் நிஜத்தில் நடந்துள்ளது. இதைத் தான் இந்த புத்தகங்கள் நம் ஆழ்மனதின் ஆற்றல் என்று கூறுகின்றன.
நமது ஆழ்மனதில் விதைக்கப் படும் எந்தவொரு எண்ணமும் நிறைவேற்றபப்டுகிறது. நமது ஆழ்மனதே நம்மை வழிநடத்திச் செல்கிறது. நம்முடைய எண்ணங்களே நம் வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்கின்றன. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே.இதன் அர்த்தம் இது தான். ஒரு குழந்தை பிறக்கும்போது ஒன்றும் அறியாமல் பிறக்கிறது. பிறகு அதன் மனதில் பதிக்கப்படும் அல்லது பதியும் எண்ணங்களே அதன் குணாதிசயங்களை தீர்மானிக்கிறது.
Da Vinci Code என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தை எழுதிய Dan Brown இன் புதிய புத்தகமான The Lost Symbol அமெரிக்காவில் உள்ள மேசொன்ஸ் என்ற ஆன்மீக வகுப்பினர் நீண்ட காலமாக பாதுகாத்து வரும் ரகசியத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. அந்த ரகசியம் மனிதனுக்குள்ளே உள்ள சக்தியாகும். கடவுள் என்பவர் மனிதனுக்குள்ளே இருக்கிறார் என்பதே அதன் தத்துவம். இதனையே இந்த புத்தகங்களும் பறைசாற்றுகின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்திய ஆன்மீக குருமார்களும் இந்த கருத்தையே வலியுறுத்துகின்றனர். அஹம் பிரம்மாஸ்மி என்ற கருத்து இன்றும் ஹிந்து மதத்தில் உண்டு. உலகம் பல வருடங்களாக விடை தேடிக் கொண்டிருந்த கேள்வி, கடவுள் இருக்கிறாரா என்பது. அந்தக் கேள்விக்கு இந்த புத்தகங்கள் தெளிவாக பதிலளித்துவிட்டன.
தன்னை அறிந்தவன் கடவுள் என்ற கூற்றுக்கு அர்த்தம் நமது மத்தின் ஆற்றலை நாம் உணர வேண்டும் என்பதே. நமது முன்னோர்கள் உபதேசித்துள்ள தியானம் நமது மனத்தை ஒருமுகப் படுத்தத் தான். மனம் ஒருமுகப்படும் போது, அதில் உள்ள எண்ணங்கள் வலுப்பெறுகின்றன. நமது நம்பிக்கை அதிகரிக்கிறது.
நமது மனதின் ஆற்றல்களை உணர்ந்து நமது இலட்சியங்களை அடையவும் நமது வாழ்க்கைப் பாதையை நாமே அமைத்துக் கொள்ளவும் இந்தக் கலையை கற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா? எந்த மதக் கடவுள் பெரியவர்? போன்ற விவாதங்களை ஒதுக்கிவிட்டு நமது மனத்தின் சக்தியை ஆக்கபூர்வமாக செயல்ப்படுத்துவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
தலைப்புகள்
- அரசியல் (4)
- அலசல் (1)
- ஆன்மிகம் (5)
- எனது பார்வையில் (18)
- தத்துவம் (7)
- படித்ததும் பாதித்ததும் (9)
- பிரபலங்களின் வாழ்க்கையில் (11)
- விமர்சனம் (1)
நான் - ஒரு சுய அறிமுகம்
- STP
- Madurai, Tamil Nadu, India
- இந்த உலகத்தை வாழச் சிறந்த இடமாக மாற்றும் முயற்சியில் ....
நண்பரே,
நம் தாய் மொழியில் மனதுக்கு உரமூட்டும் வளமையான கருத்துக்கள் உள்ள நூல்கள் ஏதுமில்லையா?