அரசனின் யாசகம்

பரித் எனும் ஞானி ஒருவர் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.

கிராமத்து மக்களுக்கு ஞானம் என்றல் என்றோ ஞானிகளைப் பற்றியோ பெரிதாக எதுவும் தெரியாது. அதனாலேயே இந்த ஞானியை பலர் வந்து பார்த்துச் சென்றாலும் இந்த மக்கள் அவரிப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவில்லை. அவர் ஒரு பெரிய மனிதர் பலரும் வந்து சந்தித்துவிட்டு செல்கிறார்கள் என்கிற அளவில் அறிந்திருந்தார்கள்.

இப்படி ஒரு நாள் அந்த ஞானியை சந்திக்க இருவர் வந்தனர். அவர்கள் சென்ற பிறகே தெரிந்தது மாறுவேடத்தில் வந்தது முகாலயப் பேரரசர் அக்பர் என்று. உடன் வந்தவர் தொடர்மலாகவோ, தான்செனாகவோ இருக்கலாமென்று அறிந்தனர். அப்போதுதான் இந்த ஞானியின் மகத்துவம் அவர்களுக்குத் தெரிந்தது. அரசரே நேரில் வந்து பார்த்திருக்கிறார் அல்லவா?

அக்பரைப் பொறுத்தவரை கலைஞர்களும் ஞானிகளும் எங்கிருந்தாலும் அவர்கலித் தேடிச் சென்று சந்திதுவிடுவார். வந்திருப்பது அரசன் என்று தெரிந்தால் அவர்களுக்கு பதட்டம் ஏற்ப்படும் என்று மாறுவேடத்தில் செல்வார். பரிதையும் அவரது ஞானத்தையும் அறிந்த பிறகு  மன்னரும்   மாருவேடமில்லாமல் நேரடியாகவே வந்து அவரைப்  பார்க்கத் தொடங்கிவிட்டார்.

இதனால் ஊர் மக்கள் ஞானியின் செல்வ்வாக்கை உணர்ந்தனர். அரசரிடம் பேசி இந்த ஊருக்குக்கு சில வசதிகளை பெற்றுத் தருமாறு வேண்டினர்.

ஞானியும் "தாராளமாக. அரசர் இங்கு வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? நானே நேரில் சென்று அரசரை சந்தித்து இது பற்றி அவரிடம் பேசுகிறேன்" என்று கிளம்பிவிட்டார்.

 அக்பரின் மாளிகைக்கு வந்த ஞானி பரிதை அனைவரும் நன்கு வரவேற்று உபசரித்தனர். அரசரிடம் அவருக்கு இருந்த செல்வாக்கை அனைவரும் அறிந்ததால் அவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தினர்.

அரசர் தொழுகையில் இருப்பதாக அறிந்து நேராக அங்கேயே சென்று விட்டார். அக்பரின் பிரார்த்தனைகள் அவர் காதுகளில் விழுந்தன.

"இறைவா எனக்கு மேலும் செல்வங்களையும் அதிகாரங்களையும் தருவாயாக" என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் அக்பர். இதைக் கேட்ட ஞானி அங்கிருந்து விலகத் தொடங்கினார்.

யாரோ வந்துவிட்டுச் செல்வதாக உணர்ந்த அக்பர் ஞானி பரித் செல்வதை பார்த்தார். அவரி அழைத்து "குருவே ஏன் வந்து ஒன்றும் பேசாமல் செல்கிறீர்கள்?" என்று கேட்டார்.

அவர் சிரித்துக்கொண்டே "எனது கிராமமா மக்களுக்காக சில வசிதிகளைக் கோருவதற்காக உன்னிடம் வந்தேன். நீயோ இறைவனிடம் உனக்கு மேலும் செல்வத்தையும் அதிகாரத்தையும் வேண்டிக்கொண்டிருந்தாய் . நீயே இறைவனிடம் யாசிக்கிறாய். பிச்சைக்கரனிடமே பிச்சை கேட்பது தவறு. நீ எந்த இறைவனிடம் கேட்கிறாயோ நானும் அந்த இறைவனிடமே வேண்டிக்கொள்கிறேன்." என்றார்.

இந்தக் கதையின் மூலம் நம் அறிவது இறைவனுக்கும் நமக்கும் எந்த இடைத்தரகரும் தேவை இல்லை என்பது. நாம் யாரிடம் சென்று ஒரு பொருளை கேட்கிறோமோ அவர்களுக்கு அதனை வழங்கியது இறைவன் தான். நாம் அவனிடமே நேரடியாக கேட்டுவிடலாம்.
  

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U